தில்லி காயத்ரி நுண்கலை அமைப்பும் லோக்கலாமஞ்சும் இணைந்து தியாகராசர் ஆராதனையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.இந்த நிகழ்வு ஜனவரி ஞாயிறு 29 ம்தேதி காலை நடைபெற்றது. சங்கீத மும்மூர்த்திகளில் மூத்த இசை வித்தகர் தியாகராசர் அவர்களின் 176 வந்த ஆராதனை உலகம் முழுவதும் பகுளபஞ்சமி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அன்றைய தினம் தலைநகரின் குளிரையும் பொருட்படுத்தாது இசைஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.முன்னதாக இசைபயிலும் மாணவர்கள் , அவர்களை தொடர்ந்து இசை வல்லுனர்கள் குருமார்கள் தனித்தனியாக பாடி தங்கள் குருவிற்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அனைவரும் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது. இதனை வயலின் வல்லுனர் தில்லி ஆர் ஸ்ரீதர் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். தலைநகர் மூத்த இசை கலைஞர்கள் ஜெயந்தி அய்யர் சுபஸ்ரீ ராமமூர்த்தி, விஜயஸ்ரீ , ஷைலஜா அவந்த் ராஜ் வழிகாட்டலில் மற்ற பாடகர்கள் தொடர்ந்தனர்.
ஏ.ஜி சுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீதரின் மூத்தமாணவர்கள் உமா அருண் , அஸ்வினி மற்றும் பலரும் வயலின் வாசித்தார்கள். கும்பகோணம் பத்மநாபன் அவரது மூத்த மாணவர்கள் சங்கரராமன், விக்னேஷ் ,ராகுல் மிருதங்கம் வாசித்தார்கள்.மன்னை கண்ணன் கடம், நாகராஜன் புல்லாங்குழல்,தத்தா கிரண் மோர்சிங், சச்சி குமார் கஞ்சிரா, ராதிகா வீணை வாசித்தனர்.
நிகழ்ச்சியை மீனா வெங்கி தொகுத்து வழங்கினார்.கோவில் நிர்வாகம் சார்பில் ஹேமா ராமசாமி, சம்பத், லட்சுமி சம்பத் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் மகா பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்ற மகளிர் தின கொண்டாட்டம்...
நொய்டாவில் சாய்கிரிபாவின் 35வது ஆண்டு தின கொண்டாட்டம்...
மார்ச் 11, 12 ல் மகளிர் தினவிழாப் போட்டிகள்- 2023...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.