புது தில்லி: மயூர் விஹார் பேஸ் இரண்டில் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகாகணபதி திருக்கோவிலில் ஏகாதேசி பஜனை வழக்கம் போல், நிகழ்ச்சி காலை 8.00 மணிக்கு ஸ்ரீ ராமபத்திரன் பாகவதர் உஞ்சவிருத்தி பஜனையுடன் தொடங்கியது. பி. வி. விஸ்வநாதன், ராமசாமி, டாக்டர் ராமலிங்கம், மற்றும் ராமபத்திரன் உட்பட பத்திற்கும் மேற்பட்ட பாகவத சிரோமணிகள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ஏகாதேசி பஜனை, ராதா, சீதா, பத்மாவதி ஆண்டாள் கல்யாண வைபவம் திருப்புகழ் திருவிழா போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து டில்லி மயூர் விஹார் பேஸ் இரண்டு ஸ்ரீ காருண்ய மகாகணபதி திருக்கோவிலின் நிர்வாகிகள் பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். ஏராளமான ஆன்மீக அன்பர்கள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வீ. தியாகராஜன்
ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்ற மகளிர் தின கொண்டாட்டம்...
நொய்டாவில் சாய்கிரிபாவின் 35வது ஆண்டு தின கொண்டாட்டம்...
மார்ச் 11, 12 ல் மகளிர் தினவிழாப் போட்டிகள்- 2023...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.