அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை நிதி திரட்டி புதுக்கோட்டை மாவட்டம் 'முத்தன்பள்ளம்' கிராம மாணவர்களுக்கு பத்து மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் ஐந்து இடங்களில் சூரிய ஒளி தெருவிளக்குகள் அமைக்கப் பட்டன.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சிறுவர்களுக்கான சாக்குப் போட்டி, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், நீளம் தாண்டுதல் போன்ற பல போட்டிகள் நடத்தினர்.

டெக்சாஸ்-சான் ஆண்டோனியோவில், தமிழ்ச் சங்கம் நடத்திய பெண்கள் விளையாட்டுப்போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் வைகாசி விசாக நாளன்று வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் உற்சவத் திருவுருவுருவங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அழகிய மேடையில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழாவில் முத்தமிழின் அரங்கேற்றம், இளமையின் கொண்டாட்டம் என இயலும், இசையும், நாடகமும் ஒன்றிணைய, மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடினர்.

டெக்சாஸ்,சான் ஆண்டோனியோ இந்தியன் அசோஸியேஷனும், தமிழ்ச் சங்கமும் இணைந்து, 'மொய் விருந்து' நடத்தியது. இதில் கிடைத்த நிதியை, தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் உரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தின் குறிச்சி ஏரியைப் புனரமைக்க அனுப்ப உள்ளது.

அயோவா தமிழ் சங்கத்தின் சித்திரை திருவிழா, 'முத்தமிழ் சங்கமம்' என்ற பெயரில் விமரிசையாக நடந்தேறியது. விழாவில் மின்னெசோட்டாத் தமிழ் சங்கப் பறைக்குழுவினரின் பறையாட்டம், இசையாஞ்சலி மற்றும் கலாஞ்சலி குழுமங்களின் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

டெக்சாஸ், சான் ஆண்டோனியோவில் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் நடத்தும் 'பாலகோகுலத்தில்' அனைத்து ஆசிரியர்களும் மேடையில் அமர, குழந்தைகள் அவரவர் ஆசிரியர்களை வணங்கி கௌரவித்தனர்

டெக்சாஸ், சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியின் 14 ஆம் ஆண்டு விழாவில் கடந்த வருடம் நடந்த போட்டிகளில் (திருக்குறள் போட்டி,தமிழ்த் தேனீ,பேச்சுப் போட்டி) நடுவர்களாக கலந்துகொண்டோருக்கு பரிசுகள் வழங்கினர்.

தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியின் 8ம் ஆண்டு விழாவில் இடம் பெற்ற சிறுவர் சிறுமியரின் கலைநிகழ்ச்சிகள்

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

நளினி மனு தள்ளுபடி

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு இயற்றிய தீர்மானத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க ...

ஜூலை 18,2019  IST

Comments

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us