இந்திய சுதந்திர தினத்தன்று, அமெரிக்கா, ஆல்லண்டவுனில் மேயர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ( படம்: தினமல்ர் வாசகர் ரமேஷ் நரசிம்மன்)

அட்லாண்டா லட்சுமி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பள்ளி ஆண்டு விழாவிலும், ஜார்ஜியா தமிழ்ச்சங்க முத்தமிழ் விழாவிலும், நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்ற சுருதி, ஸ்ரீநிதி, அஷ்வின், ஹரிணி, சௌம்யா, மற்றும் சோபனா.

அரிசோனா ஃபீனிக்ஸ் பெருநகரில் சுதாகர்- ஷீலா தம்பதியின் மகன் சுசீல், மகள் சீதா ஆகியோர் இணைந்து, சாண்ட்லர் கலை அரங்கத்தில் வீணை இசைமழை பொழிந்தனர்

அட்லாண்டா டுலுத் உயர்நிலைப் பள்ளி அரங்கில், செல்வி. அக்ஷரா ஜெயராமன், செல்வி. ஹரிகா ஜனந்த்யாலா இணைந்து வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

டெக்சாஸ்-சான் ஆண்டோனியோ ஹெலோடஸ் மலை இந்துக் கோவிலில் ஆடிக்கிருத்திகையன்று முருகன் பஞ்சாமிர்தம், பால், விபூதி, சந்தனம், தயிர், புஷ்ப அபிஷேகம் முடிந்து சர்வாலங்காரமாக காட்சி அளித்தார்

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை நிதி திரட்டி புதுக்கோட்டை மாவட்டம் 'முத்தன்பள்ளம்' கிராம மாணவர்களுக்கு பத்து மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் ஐந்து இடங்களில் சூரிய ஒளி தெருவிளக்குகள் அமைக்கப் பட்டன.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் சிறுவர்களுக்கான சாக்குப் போட்டி, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், நீளம் தாண்டுதல் போன்ற பல போட்டிகள் நடத்தினர்.

டெக்சாஸ்-சான் ஆண்டோனியோவில், தமிழ்ச் சங்கம் நடத்திய பெண்கள் விளையாட்டுப்போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் வைகாசி விசாக நாளன்று வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் உற்சவத் திருவுருவுருவங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அழகிய மேடையில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழாவில் முத்தமிழின் அரங்கேற்றம், இளமையின் கொண்டாட்டம் என இயலும், இசையும், நாடகமும் ஒன்றிணைய, மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடினர்.

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

ஹபீஸ் சயீத் நீதிமன்றத்தில் மனு

லாகூர்:மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாக்.,கை சேர்ந்த ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் ...

ஆகஸ்ட் 21,2019  IST

Comments

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us