நியூசிலாந்து கர்நாடிக் மியூசிக் சொசைட்டி, ஆக்லாந்தில் பந்துலா ராமா கச்சேரிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள் அவருடன் வித்வான் மூர்த்தி வயலின் மற்றும் வித்வான் சாய் கிரிதர் மிருதங்கம் வாசித்தனர்.

ஆக்லாந்துதமிழ் அஸோசியேஷன் ஆதரவில், கலைமாமணி மதுரை ஜி.எஸ். மணியின் கர்நாடக சங்கீதமும் சினிமாவும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அசோக்மல்லூர் வயலினும், வெல்லிங்டன் இக்ரம் சிங் தபலாவும், ப்ரெவிக் மைசூர்யா ஹார்மோனியமும் வாசித்தனர்.

பிரிஸ்பேனின் பிருந்தாவன் இசைப்பள்ளி மாணாக்கர்களின் 2019க்கான கர்நாடக இசை நிகழ்ச்சி, ஆக்காஃசியா ரிட்ஜ் அரசுப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

நியூ ஸிலாந்து இந்தியன் பைன் ஆர்ட்ஸ் ஆதரவில், வெலிங்டன் எபுனி ஹாலில், மதுரை ஜி.எஸ். மணியின் லெக்-டெம் சிறப்பாக நடைபெற்றது. சினிமாவும் கர்நாடக சங்கீதமும் என்கிற தலைப்பில் மணி பேசி, பாடி ரசிகர்களை உற்சாகக் கடலில் மூழ்கடித்தார்.

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

'இந்தியாவின் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் இன்னுயிர் ஈந்த ஜவான்களின் ஆன்மா சாந்தியடைய ஆக்லாந்தில் உள்ள அயோடீயா மைய்யத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆக்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கரகாட்டம், பாலங்குழி, பம்பரம் ஆடுதல், கில்லி. உறி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டிகல் நடைபெற்றன.

ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனில் தாய்த்தமிழ்ப் பள்ளி, இந்த ஆண்டு பொங்கல் விழாவை குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம் மற்றும் பல்வேறு தொழில்நிறுவனங்களின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்தது. மாலையில் பல விளையாட்டு நிகழ்ச்சிகளும், பின்னர் அந்தி சாயும் நேரத்தில் மேடை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஆஸ்திரேலியா, விக்டோரியா, மெல்போர்ன், கர்ரம் ட்வுன்ஸ் ஶ்ரீ சிவா விஷ்ணு கோயிலில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து, காவடி எடுத்தனர். மாலையில் தேரோட்டம் நடைபெற்றது.

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பால்காவடி, புஷ்பக்காவடி மற்றும் பால்குடத்துடன் பக்தியுடன் எடுத்து வந்தார்கள். முருகனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சமிர்தம் மற்றும் விபூதி அபிஷேகம் நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us