துபாய் மெய்தான் பகுதியில் நடந்த ஐந்து கிலோ மீட்டர் பிரிவில் தமிழக நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் செய்யது அலி 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். அவருக்கு துபாய் விளையாட்டு கவுன்சிலின் அதிகாரி கோப்பை வழங்கி கௌரவித்தார்

குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இந்திய 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் குவைத் ஜெயபிரியா மத்திய ரத்த வங்கியில்நடத்திற்று. இதில் 152 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்

இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி. முரளிதீரன் அமீரகத்தில் துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவியருடன் சந்திப்பு, இந்திய சமூகத்தினருடன் சந்திப்பு துபாய் ஜெபல் அலி பகுதி கோவிலுக்கு சென்று பார்வையிடல்,உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

இந்தியர் நலவாழ்வு பேரவை துபாய் மண்டலம் சார்பாக அல் பரஹா மருத்துமனையில் இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

சவுதி அரேபியாவில் செந்தமிழர் பாசறை உறவுகள் சார்பாக சமத்துவ நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. மண்டல தலைவர் ஜோஸ் மற்றும் செயலாளர் அசோக்குமார் முன்னிலையில் இந்த விழா முன்னெடுக்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் அல்-அசா தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா அல்-அசாவில் நடைபெற்றது. அன்று அதிகாலையில் பொங்கல் இடப்பட்டது

துபாயில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவைச் சேர்ந்த ஆழியவாக்கால் கிராமத்து வெளிநாடு வாழ் மக்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து 8ம் ஆண்டு பொங்கல் விழாவை கடந்த 15ம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் கொண்டாடினார்கள்.

குவைத் சங்கத்தமிழ்க் கலை மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கலிட்டு சூரிய வழிபாடு செய்தனர். தம்பதியர், ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர்க்கான விளையாட்டுப்போட்டிகள், தலைவாழை இலை விருந்து, பானை உடைக்கும் போட்டி இடம் பெற்றன

அஜ்மான் சுற்றுலா மேம்பாட்டுத்துறை ஆதரவுடன் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டப் போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வீரர் செய்யது அலி 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மூன்றாவது இடம் பெற்றார்

துபாய் ஹம்தான் பின் முஹம்மது பாரம்பரிய மையத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் . 12 நாட்கள் நடக்கும் அமீரக பாலைவன ஒட்டகப் பயணத்தில் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட15 நாடுகளைச் சேர்ந்த 34 பேர் பங்கேற்றனர்

1 2 3 4 5 6 7 8 9 10
Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
Advertisement
Advertisement

Follow Us