'கலாட்டா குடும்பம்' என்ற அமைப்பு துபாயில் உள்ள மிக பெரிய முஷ்ரிப் பூங்காவில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஷார்ஜா கொடி தீவு பகுதியில் வேடிக்கை விநோத ஓட்டம் நடந்தது. இந்த ஓட்டப் போட்டி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. உடல் நலனை முக்கியமாக மையப்படுத்தி இந்த ஓட்டம் நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஷார்ஜா அல் நூர் தீவு பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியை அமீரகத்தில் வசித்து வரும் பொது மக்களும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

துபாய் நகரின் ராஷித் துறைமுகத்துக்கு இந்திய கப்பற்படைக்கு சொந்தமான விக்ரம் என்ற கப்பல் வந்தது. இந்திய தூதரக அதிகாரி ஸ்மிதா பாண்ட் இந்த கப்பலின் வருகை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவை போற்றும் வகையில் இருப்பதாக கூறினார்.

ராசல் கைமா பகுதியில் வருடாந்திர தூய்மைப் பணி நடந்தது. இதில் ராசல் கைமா பகுதியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.

ஷார்ஜா விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் ஓட்டப் போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் நாகர் கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி இரண்டாம் இடம் பெற்றார். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், மீலாது நபி பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த வாலிபால் போட்டிகளை சங்க பொதுச் செயலாளர் கலீல் பாகவீ தொடங்கி வைத்தார். முதலிடம் பெற்ற அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கும், ஆட்ட நாயகனுக்கும் குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் வழங்கிய சுழற்கோப்பைகளும், பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

ரஜினிகாந்த் நடித்த மிகபிரம்மாண்டமான 2.0 திரைப்படம் கத்தாரின் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் கத்தாரில் மட்டும்140 காட்சிகள் திரையிடப்பட்டு, இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது 2.0, என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் ரஜினி மக்கள் மன்றம் நான்கு சிறப்பு ரசிகர் காட்சிகளை வெவ்வேறு காட்சியகங்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்பட சிறப்பு காட்சிக்கு பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. பஹ்ரைன் முக்தா சினிமாஸ் அரங்கில் 6 திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ரஜினியின் புகைப்படம் பொறித்த டி-சர்ட்கள், பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் பெயர் பொறித்த டிக்கெட்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் நடிகர் “ஒரு தலை ராகம்” ரவீந்திரன் கேக் வெட்டி தொடங்கி வைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஸ்ரீ சிவன் கோயில் ( மோதீஸ்வரர் மந்திர்), மஸ்கட்

 ஸ்ரீ சிவன் கோயில் ( மோதீஸ்வரர் மந்திர்), மஸ்கட் மஸ்கட் சுல்தான் அரண்மனை அருகே சிப் விமான நிலையத்திலிருந்து 35 கி.மீ., தூரத்தில் ...

அக்டோபர் 23,2017

சிவ கிருஷ்ணா கோயில், துபாய்

சிவ கிருஷ்ணா கோயில், துபாய்SIVA KRISHNA TEMPLE, DUBAIமுகவரி சிவா மந்திர், கிருஷ்ணா மந்திர்துபாய் அருங்காட்சியகம் அருகில், பர் துபாய்62 ஏ தெரு, ...

அக்டோபர் 15,2017

1
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us