துபாய் அல் ஜடாப் பகுதியில் வசித்து வரும் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி ஹரிஹரன் நவராத்திரயை முன்னிட்டு தனது வீட்டில் கொலு வைத்து அழகு படுத்தியிருந்தார்.

துபாய் நகரில் எக்ஸ்போ 2020 கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கில் பஞ்சாபி மொழி கீர்த்தனைகள் பாடப்பட்டது.

ஷார்ஜாவில் நவராத்தியையொட்டி சங்கீத இசை நிகழ்ச்சி கதா அமைப்பின் சார்பில் நடந்தது. என். ராதாகிருஷ்ணன், அனன்யா சதீஷ், வீணா அபிலாஷ் உள்ளிட்ட குழுவினர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்கள் பாடினர்.

பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவின் அபு சைபா பகுதியில் காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீவாஸ்தவா மரக்கன்றுகளை நட்டார்.

சவுதி அரேபியா ரியாத் நகரில் மகாத்மா பிறந்த நாளையொட்டியும் இந்தியாவின் 75 வது சுதந்திர தின ஆண்டையொட்டியும் இந்திய தூதரகத்தின் சார்பில் நடைபெற்ற காந்தியடிகள் தபால் தலை மற்றும் நாணய கண்காட்சியை இந்திய தூதர் அவுசப் சயீத் திறந்து வைத்தார்.

ஆரோக்கியமான நகரத் திட்டத்தின் அடிப்படையில் பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் கடற்கரையை சுத்தம் செய்யும் நற்பணி.மேற்கொள்ளப்பட்டது.

மஸ்கட்டில் மஹாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி இந்திய தூதரகத்துடன் இணைந்து உலக மலையாளி பெடரேசன் அமைப்பு ரத்த தான முகாம் நடத்தியது.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி, பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மஹாத்மா காந்தியடிகள் சிலைக்கு இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீவாஸ்தவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குவைத்தில் இந்திய ஓவிய கண்காட்சியை குவைத் வெளியுறவுத்துறை அமைச்சரின் மனைவி ஷேக்கா ஹனூப் பதெர் அல் முஹம்மது அல் சபா தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஓவியங்கள் குறித்து இந்திய தூதரின் மனைவி அவருக்கு விவரித்தார்.

சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நியூசிலாந்து நாட்டின் தூதர் பர்னே ரிலே வந்தபோது, இந்திய தூதர் அவ்சப் சயீத்தும் அவரும் தூதரக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலை முன்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us