தைவான் அரசாங்கம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதையும், மற்ற நாடுகளுக்கு உதவியதையும் பாராட்டி தைவான் தமிழ்சங்கமும் தைவான் வாழ் இந்தியர்களும் பேரணி நடத்தி நன்றியை தைவான் அரசுக்குத் தெரிவித்தனர்.

டோக்கியோ தமிழ்ச்சங்கம் மூன்றாவது இசை சமர்ப்பணம் நிகழ்ச்சியை இந்திய தூதரகத்தின் ஆதரவுடன், அமீரக நண்பர்களுடன் இணைந்து வெற்றிகரமாக அரங்கேற்றியது . நிகழ்ச்சியை ஜப்பானின் இந்திய தூதரக தலைவர் சஞ்சய் குமார் வர்மா தொடங்கி வைத்தார்

தனாகா பூசு தமிழ் பேசு என்னும் முழக்க வரியோடு தமிழ் இல்லம் திருக்குறள் பேரவை, தங்கராசன் அறக்கட்டளை, ஜெ. மஹா அப்பாவு அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்பினரும் ஒன்றிணைந்து மியன்மார் பிள்ளைகளிடம் தமிழ் பேசும் ஆர்வத்தை வளர்த்தனர்.

தைவான் தமிழ்ச்சங்கத்தின் 8 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைபேயில் இந்திய மற்றும் தைவான் நடனக்குழுவினரின் நடன நிகழ்சிகள் என்று ஒரு கலாச்சார கதம்பத்திருவிழாவாக நடைபெற்றது

தைவான் சங்கம், உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் தைவானில், ஹுவாலியன் மற்றும் தைபே நகரத்தில் திருவள்ளுவருக்கு இரண்டு சிலைகள் நிறுவப்பட்டன.

சிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி செயின்ட் ஜோசப்ஃ கல்லூரியில் நடைபெற்றது. இதில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் தண்ணீர்மலை கண்ணப்பன், மொத்தம் உள்ள 5 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.

ஹாங்காங்கில் குழந்தைகள் கலை குழு, ஹிந்து ஸ்வயம் சேவாக் சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை இணைந்து வழக்கம்போல் இந்த ஆண்டும் நடத்திய இளைஞர்கள் திருவிழாவில் பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, பாலிவுட், யோக, கிராமியம், கலவை என அனைத்து வகை நிகழ்வுகளையும் காண முடிந்தது.

ஹாங்காங்கில் இநதிய குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தேசியக் கொடியை தூதர் புனீத் அகர்வால் ஏற்றி வைத்து. ஜனாதிபதியின் உரையை வாசித்தார்.

சீனாவின் துங் சுங் நகரில் பொங்கல் விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பெரியவர்களால் பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள் இளைய சமுதாயத்தினருக்கு கற்றுத் தரப்பட்டன. சுமார் 20 குழந்தைகள் இந்த விளையாட்டுகளை, குறிப்பாக புலியாட்டத்தைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்தனர்.

வடகிழக்கு சீனாவின் தாலியன் நகரம் தமிழ் பிணையம் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்திய உணவகத்தில் அங்கு வசிக்கும் தமிழர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து, மகிழ்வை வெளிப்படுத்தினர்.

1 2 3 4 5 6 7 8 9 10

சியோலில் கொரிய புத்தாண்டு கொண்டாட்டம்

அனைத்து கொரிய மக்களும் ஒன்று கூடி சந்திர புத்தாண்டை பிப்ரவரி 12 ம் தேதி கொண்டாடினர். இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிப்ரவரி 11 ...

பிப்ரவரி 11,2021

கொரிய தமிழ் பேரவை ஆண்டு விழா

கொரியா தமிழ் பேரவை (கொரியா தமிழ் நண்பர்கள்) ஆண்டு விழா ஜனவரி மாதம் 9ம் தேதி மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த வருட கொரியா தமிழ் ...

பிப்ரவரி 04,2021

ஹாங்காங்கில் தமிழர் மதம், சமயம், மார்க்கம், மெய்யியல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கம்

ஜனவரி 1 ம் தேதியன்று தமிழர் மதம், சமயம், மார்க்கம், மெய்யியல் தொடர்பான இளந்தமிழர் பன்னாட்டு கருத்தரங்கம் இணைய வழியில் ...

ஜனவரி 04,2021

இளந்தமிழர் புலனக் குழு கொரோனாவின் கொடை

பன்னாட்டு இளந்தமிழர் குழு ஆரம்பித்த மே 31 முதல் மிகவும் வேகமாக செயலாற்றும் புலன குழு என்றே சொல்ல வேண்டும். இந்தக்குழு இணையத்தின் ...

டிசம்பர் 06,2020

ஹாங்காங்கில் முருக வழிபாடும், கந்த சஷ்டி விழாவும்

  சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் சுமார் 120,000 இந்து மக்கள் வசிக்கின்றனர். இது ஹாங்கங்கின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 1.6% ...

நவம்பர் 24,2020

ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

தீபாவளி என்பது தமிழர் பண்டிகையா என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது இந்த வருட தீபாவளி. இளந்தமிழர் குழுவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு ...

நவம்பர் 16,2020

டோக்கியோ தமிழ்ச் சங்கத்தில் ஆன்லைனில் தீபாவளி கொண்டாட்டம்

டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் உலகில் முதல் முறையாக நவம்பர் 15 அன்று மாலை ஆன்லைனில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த ...

நவம்பர் 15,2020

எஸ்பிபி.,க்கு பெய்ஜிங் ரசிகர் கவிதையால் கண்ணீரஞ்சலி

யார் வந்து துயில் எழுப்புவார்?ஆயர்பாடி மாளிகையில் மாயக் கண்ணனை துயில் எழுப்பினாய்..தூங்காதே தம்பி தூங்காதே என்றுஇளம் ...

செப்டம்பர் 27,2020

ஹாங்காங்கில் மலையேறிச் சென்று விநாயகரை வழிபட்ட தமிழர்கள்

ஹாங்காங்கில் ஹைக்கிங் பிள்ளையார். தமிழ்நாட்டில் விநாயகர் ஊர்வலம் தடை செய்யப்பட்டிருக்க, ஹாங்காங்கில் ஒரு சிறு தமிழர்கள் குழு ...

ஆகஸ்ட் 24,2020

ஜப்பான் தமிழ்ச்சங்கத்தில் இணையவழி தற்காப்பு கலை வகுப்பு

  டோக்கியோ : ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நமதுதொல்தமிழ்க்குடியின் பாரம்பரிய தற்காப்புக் கலையான அடிமுறையை இணையை ...

ஜூலை 18,2020

1 2 3
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us