சிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி செயின்ட் ஜோசப்ஃ கல்லூரியில் நடைபெற்றது. இதில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் தண்ணீர்மலை கண்ணப்பன், மொத்தம் உள்ள 5 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.

ஹாங்காங்கில் குழந்தைகள் கலை குழு, ஹிந்து ஸ்வயம் சேவாக் சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை இணைந்து வழக்கம்போல் இந்த ஆண்டும் நடத்திய இளைஞர்கள் திருவிழாவில் பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, பாலிவுட், யோக, கிராமியம், கலவை என அனைத்து வகை நிகழ்வுகளையும் காண முடிந்தது.

ஹாங்காங்கில் இநதிய குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தேசியக் கொடியை தூதர் புனீத் அகர்வால் ஏற்றி வைத்து. ஜனாதிபதியின் உரையை வாசித்தார்.

சீனாவின் துங் சுங் நகரில் பொங்கல் விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பெரியவர்களால் பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள் இளைய சமுதாயத்தினருக்கு கற்றுத் தரப்பட்டன. சுமார் 20 குழந்தைகள் இந்த விளையாட்டுகளை, குறிப்பாக புலியாட்டத்தைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்தனர்.

வடகிழக்கு சீனாவின் தாலியன் நகரம் தமிழ் பிணையம் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்திய உணவகத்தில் அங்கு வசிக்கும் தமிழர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து, மகிழ்வை வெளிப்படுத்தினர்.

ஹாங்காங்கில் ரூபா சாஸ்திரியின் கர்னாடக இசை கச்சேரி நடைபெற்றது. உள்ளூர் கலைஞர் அரவிந்தன் மிருதங்கம் வாசிக்க, ஆஸ்திரேலிய கலைஞர் பைரவி வயலின் இசைத்தார். மூன்று கலைஞர்களும் சேர்ந்து, தமிழ், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருத பாடல்கள் மூலம் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தனர்.

ஹாங்காங்கில் ஒரு மாத காலம் நடத்தப்பட்ட ஒரு நடை சாதனை போட்டியில், சிவகுமார் என்ற தமிழர் ஆண்களுக்கான தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

ஹாங்காங் தமிழ் குழந்தைகளின் அரும்புகள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் தேவி பாபு, பிரியா வெங்கட் குழுவினரின் நடனங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

ஹங்காங் அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிய கலாசார விழாவில், 6 இந்திய குழுக்கள், பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த, பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் பாலிவுட் நடனங்கள், கதக், ஆந்திர நடனங்கள், கர்னாடகம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் கிராமிய நடனங்களை பல்வேறு உடைகளுடன் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தன.

சீனாவின் ட்சே சியாங்மாநலத்தின் வூஜென் நகரில் 3 நாள் நடைபெறும் 5வது சர்வதேச இணைய மாநாட்டு முதல் நாள் நிகழ்வாக இணையத்தின் ஒளி கண்காட்சி தொடக்க விழா, இனைய மாநாடு தொடக்க விழா போன்றவை நடைபெற்றன.

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us