“ தி வைரஸ் எழுமின் “ அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் மாநாட்டில் சிங்கப்பூரிலிருந்து இருபது நிறுவனங்களைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள். சிங்கப்பூரின் பாரம்பரிய சிவப்பு வெள்ளை உடையணிந்து அணிவகுத்து வந்தது அனைவரையும் ஈர்த்தது.
சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் அன்னையர் தின சிறப்பு வழிபாட்டில் ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு திருப்பாவாடை சாற்றும் நிகழ்வும் தாயார் பதினாறு செல்வங்களும் வழங்க ஆசி வழங்கியதும் கிடைத்தற்கரிய பெரும் பேறாகப் பக்தர்கள் போற்றி வழிபட்டனர்.
சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழ்மொழி நிறைவு விழாவில் தமிழறிஞர் சாமிக் கண்ணுவுக்கு கணையாழி விருதும் , இவ்வாண்டுக்கான இளங்கவிஞருக்கான தங்க முத்திரை விருது இரா.அருள்ராஜ்க்கும் வழங்கப்பட்டது
சென்னையில் நடைபெற்ற கலைமகள் விருது வழங்கு விழாவில் சிங்கப்பூர் மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமனுக்கு கலைமகள் விருதும், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி நடத்தப்பட்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. கட்டுரைப் போட்டி பரிசும் வழங்கப்பட்டது
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொபாயோ ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ நவாக்ஷரி லட்ச தீப மஹா யாகம், யக்ஞம் மார்ச் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சிங்கப்பூரிலுள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் வசிக்கும் 206 முதியவர்களின் அன்றாட தேவைகளுக்காக மளிகை மற்றும் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.
சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமிக்கு ஸ்ரீ மஹந்யாச ஏகாதச ருத்ராபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி மாலை மற்றும் 23 ஆம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிங்கப்பூர் குளக்கரைச் சாலை அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் புனர் பூசத் திருநாளில் ஸ்ரீ தண்டாயுதபாணி வெள்ளி ரதத்தில் புறப்பட்டுத் தமது தாயார் சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள ஸ்ரீ மாரியம்மனிடம் ஆசி பெற்று – தமையன் உறையும் லயன் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளினார்.
ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் தைப்பூச மஹோற்சவம் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மயில் வாகனத்தில் ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார்.