சிங்கப்பூரில் ஶ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹாயாகம் 7 நாள் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பனம், ரக்ஷாபந்தனம், ஸ்ரீ நவாக்க்ஷரி ஜபம், ஹோமம், த்ரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, தீபாராதனையுடன் நிறைவு பெற்றது.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ குரு ராகவேந்திரா 424 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. வாசனாதித் திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தர்கள் மலர்களையும் பழங்களையும் வரிசை எடுத்து சமர்ப்பித்தனர்.

சிங்கப்பூர் கவிமாலை ஏற்பாட்டில் கவிஞர் மா.அன்பழகன் எழுதிய “ சிங்கப்பூர் சொல்வெட்டு 555 “ எனும் நூல் (வரலாற்று ஆவணப் பதிவேடு), சிறப்பு விருந்தினர் சிங்கப்பூரின் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எம். பாலசுப்பிரமணியம் 103 ஆவது பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர் சாங்கி ராமர் கோயிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால நிறைவில் சர்வ அலங்கார நாயகராக பர்வதவர்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார்.

சிங்கப்பூரின் கேளாங் கிழக்கு ஸ்ரீ சிவன் ஆலயம் சிவராத்திரிக்குப் பிரசித்தி பெற்றது. சிவ மாலா மந்திர மகா யாகம், இந்திராட்சி சிவ கவச பாராயணம், இலட்சார்ச்சனை, சிவ பஞ்சாட்சர ஹோமம், ஏகாதச ருத்ர ஜபம், தங்க வில்வ அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது

சிங்கப்பூர் இலக்கிய வானில் புதியதோர் நட்சத்திரமாக பக்திநெறி இளையர் ஒருங்கிணைந்து முதன்முறையாக அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆலயத்தில் இறைநெறி சார்ந்ததொரு மகா சிவராத்திரி பட்டி மன்றத்தை அறிமுகப்படுத்தி மகிழ்வித்தனர்.

சிங்கப்பூர் ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில் நடைபெறும் திருக்குறள் வகுப்பு பேச்சுப் போட்டியில் சிறுவர் குழுவிற்கு 4 முதல் பரிசுகளையும் பெரியவர் குழுவிற்கு 3 முதற் பரிசுகளையும் சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ராம.கருணாநிதி வழங்கினார்.

 

லிங்கோத்பவராக விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் அடியும் முடியும் இல்லாமல் ஒளிப் பிழம்பாக சிவ பெருமான் காட்சி அளித்த நாள் சிவ ராத்திரி. இத்தகு சிறப்பு மிகு விழாவை சிங்கப்பூர் கேலாங் கிழக்கு ஸ்ரீ சிவன் கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாட ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் பாவலர் இரா.வேங்கடாசலம் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவை நடத்தியது. இலக்கியக் கள மதியுரைஞர் வெ.புருஷோத்தமன் வாழ்த்துரை ஆற்றி, தினமலர் நாளேடு இணையவழி உலகத் தமிழர்களிடை உறவுப் பாலமாக விளங்கி வருவதைச் சுட்டிக் காட்டினார்

சிங்கப்பூர் கேலாங் கிழக்கு ஸ்ரீ சிவன் கோயிலில் அதிருத்ர மஹா யாகம் சிங்கப்பூரில் முதன் முறையாக ஜனவரி முப்பதாம் தேதியிலிருந்து பிப்ரவரி ஆறாம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: http://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: http://www.sph.com.sg/contact-us/for-media/media-contacts/Tamil ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us