திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், மூதூர் கிழக்கில் உள்ள சந்தனவேடடை கிராமத்தை சேர்ந்த வருமானம் இன்றி அல்லல் படும் வேடர் இன மக்களுக்கு 100 உலர் உணவு பொதிகளை திருகோணமலை ரோட்டரி கழகத் தலைவர் த. அகிலனும் ரொட்டறி கழக அங்கத்தவர்களும் வழங்கினர்

இலங்கை. திரிகோணமலை, மொரவெவா ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் சங்கத்தினர் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் நான்கு மதத்தினருக்குமான சர்வ மத வழிபாட்டுத் தலங்களை அங்குரார்ப்பணம் செய்தனர்.

அஷ்டாங்க யோகா மலேசிய கூட்டமைப்பு மூன்றாவது முறையாக தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி 2022, கெடா மாநிலம் சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய அரங்கத்தில் நடந்தது. 5 முதல் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

திருகோணமலை ரோட்டரி கழகச் சார்பில் 25 இலட்சம் பெறுமதியான காது பரிசோதிக்கும் கருவி திருகோணமலை பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்னவுக்கு தலைவர் அகிலன், பொருளாளர் சக்திபவன், ரகுராம் செயலாளர் பிரபாகரனால் கையளிக்கப் பட்டது.

இயற்கை விவசாயத்தில் அன்னாசி பழ சாகுபடியில் ஈடுபட்டு பல்வேறு விருதுகள் பெற்றுவரும் மலேசியாவை சார்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளை

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், கழகத்தின் தலைவர் த. அகிலனால் ரூ. இரண்டு லட்சம் பெறுமதியான 14 குருதி அமுக்கம் பார்க்கும் கருவிகள் நோயாளிகளின் அவசர தேவைக்கு பயன்படுத்த அன்பளிப்பாக வழங்கப்ப பட்டது.

குவைத்தில் இந்திய தூதரகம், குவைத் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து நடத்திய சைபர் பாதுகாப்பு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குவைத் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் மெசரி பூதைக்கு, இந்திய தூதர் சிபி ஜார்ஜ் நினைவுப் பரிசு வழங்கினார்.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 43 ஆவது தலைவராக த. அகிலன் பதவி ஏற்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் இடம் பெற்றது.

திருகோணமலையின் மூதூர் பிரதேசத்திலுள்ள பாட்டாளிபுரம் கிராமத்திற்கு திருகோணமலை ரோட்ராக்ட் கழகத்தினால், ரோட்டரி கழகத்துடன் இணைந்து கொடை நிகழ்ச்சித்திட்டம் “ஈதலே நன்று” எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்டது.

நவீன “பென்குயின் மாதிரி குப்பை சேகரிப்பு தொட்டி தொகுதி” திருகோணமலை பொது மருத்துவ மனை பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்ன விடம் திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் தலைவர் அகிலன், மக்கள் தொடர்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், செயலாளர் பிரபாகரனால் கையளிக்கப் பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

 மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்இடம்:கலைத்தூது கலாமுற்றம், றக்கா வீதி, யtழ்ப்பாணம்

மே 23,2022

1
Advertisement

கதிரவன், ஸ்ரீலங்கா

கதிரவன், ஸ்ரீலங்காஇணையதள முகவரி: http://kathiravan.comமின்னஞ்சல் முகவரி: kathiravanmedia@gmail.commykathiravan@gmail.comTel: 0041 32 510 46 82 ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us