/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஹரிநகர் ருத்ர சிவா மந்திரில் ஜயப்ப பஜனை
/
ஹரிநகர் ருத்ர சிவா மந்திரில் ஜயப்ப பஜனை
டிச 08, 2025

புதுடில்லி : கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, ஹரிநகரில் உள்ள ருத்ர சிவா மந்திரில், சக்கம்குளங்கரா பஜனை சமிதி, கேரளா குழுவினரின் ஐயப்ப பஜனை நடைபெற்றது. ஏற்பாடுகளை ஸ்ரீ ராமநவமி மஹோத்சவ சமிதி செய்திருந்தது.
நாராயணன் பாபு, வினோத், ஹரிஹரன் ஆகியோர் பங்கேற்று ஐயப்பனின் மகிமைகளைப் போற்றும் தெய்வீக பாடல்களைப் பாடி பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தினர். இதற்கு பக்க பலமாக, விஜய் ராகவன் (ஹார்மோனியம்) என்.எஸ். கிருஷ்ணன் (மிருதங்கம்) மற்றும் ஆனந்த் (டோல்கி) ஆகியோர் வாசித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டில்லி சுனில் பாகவதரை ஸ்ரீ ராமநவமி மஹோத்சவ சமிதியினர் சால்வை அணிவித்து கெளரவித்தனர். கிருஷ்ணன் குட்டி நாயரின் ஒலிபெருக்கி அமைப்பின் ஆதரவு பஜனையை முழுமையாக மகிழ்வித்தது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
