/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டாவில் கோவிலில் சாஸ்தா ப்ரீதி
/
நொய்டாவில் கோவிலில் சாஸ்தா ப்ரீதி

நொய்டாவில் கோவிலில் சாஸ்தா ப்ரீதி
நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் நுரூனி பாலாகோகுலம் பாகவதரின் ஸ்ரீ அய்யப்ப பஜனை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் மற்றும் பி எச் இ எல் அய்யப்ப பூஜை சமிதி இணைந்து நவ. 30 அன்று ஏற்பாடு செய்திருந்தனர். வேத மந்திரங்கள் ஒலிக்க அன்றைய நிகழ்வு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பக்தர்கள் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். படி பாட்டு, தொடர்ந்து மஹா தீபாராதனை, மற்றும் மஹா பிரசாதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஐயப்பனின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து பூஜைகளையும் விபிஎஸ் ஆஸ்தான வாத்தியார் : ஸ்ரீ ஷங்கர் சாஸ்திரிகள் தலைமையில், கோவில் வாத்தியார்கள், ஸ்ரீ மணிகண்டன் மற்றும் ஸ்ரீ மோஹித் சர்மா அவர்களின் உதவியுடன் நடைபெற்றது. கடுமையான குளிர் காலம் மற்றும் காற்றின் தரம், இரண்டையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள், நொய்டாவில் இருந்து மட்டுமின்றி, அண்டை இடங்களிலிருந்தும் அதிக அளவில் குவிந்தனர்.
