தமிழகத்தின் கண்ணாடி

21 Oct 2020
1hours ago
1 / 10
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், கலை கல்லூரி இறுதியாண்டு அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1hours ago
2 / 10
சென்னையில் காலையில் வெயிலின் தாக்கம் குறைந்து திடீரென சூழ்ந்த கருமேகங்களால் ரம்மியமாக காட்சியளிக்கும் கடற்கரை.இடம் : திருவான்மியூர் .
2hours ago
3 / 10
பள்ளிகள் திறக்காததால் தள்ளுவண்டியில் தனது பேரனை உட்கார வைத்து காய்கறி வாங்கி விற்பனை செய்ய தள்ளி கொண்டு செல்கிறார். இடம்: உடுமலை.
2hours ago
4 / 10
தஞ்சை அடுத்த கரந்தை பகுதியில் புதியதாக, டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் செய்தனர். இதனால், தஞ்சை - கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2hours ago
5 / 10
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு விழுப்புரம் ஆயுத படை வளாகத்தில் நினைவு ஸ்துபியில் டி.ஜி.ஜி., எழிலரசன் தலைமையில் கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்னன், மாவட்ட தலைமை நீதிபதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
2hours ago
6 / 10
காவலர்கள் வீரவணக்கம் நாளை முன்னிட்டு விழுப்புரம் ஆயுத படை வளாகத்தில் நினைவு ஸ்துபியில் கலெக்டர் அண்ணாதுரைஅஞ்சலி செலுத்தினார்.
2hours ago
7 / 10
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னம் முன், மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
5hours ago
8 / 10
தமிழக முதல்வர் பழனிசாமியின் தாய் தவுசாயம்மாள் மறைவை அடுத்து தினமலர் சென்னை பதிப்பு ஆசிரியர் கி.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் முதல்வருக்கு ஆறுதல் கூறினர். நடுவில் இணை இயக்குனர் ஆ.லட்சுமிபதி. இடம்: சென்னை.
5hours ago
9 / 10
தமிழக முதல்வர் பழனிசாமியின் தாய் தவுசாயம்மாள் மறைவை அடுத்து, அவரது உருவப் படத்திற்கு, 'தினமலர்' சென்னை பதிப்பு ஆசிரியர் கி.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் மலரஞ்சலி செலுத்தினர்.
6hours ago
10 / 10
திருப்பூர், நஞ்சராயன் குளத்தில் ஹாயாக நீந்தி வரும் பெலிகன் (கூழைக்கிடா).
Advertisement