அரசியல்ஆல்பம்:

23-ஜூலை-2019
1 / 9
பஞ்சாயத்து தலைவர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இடம்: ஹவுரா.
2 / 9
டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம்.
3 / 9
புதுச்சேரி கவிஞர் வாணிதாசன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் நாராயணசாமி மலரஞ்சலி செலுத்தினர். அருகில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் சிவா வெங்கடேசன்.
4 / 9
சென்னை ஆவடியை அடுத்த கோயில்பதாகையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் குளம் தூர்வாரும் பணியை பூஜையுடன் துவக்கி வைத்த அமைச்சர் க.பாண்டியராஜன்.
5 / 9
கர்நாடக சட்டசபை விவாதத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் குமாரசாமி. இடம்: விதான் சவுதா, பெங்களூரு
6 / 9
லோக் ஜனசக்தி கட்சி எம்.பி., ராம்சந்திர பஸ்வான் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பிகார் முதல்வர் நிதிஷ்குமார். இடம்: பாட்னா.
7 / 9
லோக்சபா கூட்டத்தில் கலந்து கொண்ட காங்., மூத்த தலைவர் சோனியா. இடம்: புதுடில்லி.
8 / 9
போர்ச்சுக்கல் நாட்டு தூதர் கார்லஸ் பெரைரா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கலந்துரையாடினார். இடம்: புதுடில்லி.
9 / 9
விழுப்புரம் மாவட்டம் பாஜ கிழக்கு வட்டம் சார்பில் திண்டிவனத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாமில் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.