நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

13-செப்-2018
1 / 10
இயற்கை முறையில்..!: அரிசி, இலை, பூக்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு இயற்கை முறையில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய சென்னை தனியார் கல்லூரி மாணவியர். இடம்: அண்ணாநகர்.
2 / 10
வைகை நதி!: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்ட வைகை தண்ணீர் மதுரையை கடந்து சென்றது.
3 / 10
மக்கள் கூட்டம்!: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூர் பூ மார்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
4 / 10
விநாயகா!: வரம் தரும் விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி என்பதால் கோவை பூ மார்க்கெட்டில் ஆர்வமுடன் ரசித்து வாங்கி செல்லும் பெண்கள்.
5 / 10
விநாயகர் குடை!: விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு திருப்பூர், தினசரி பூ மார்க்கெட் பகுதியில் விநாயகர் குடை விற்பனைக்கு வந்துள்ளது.
6 / 10
குப்பையிலே..!: தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விற்பனையாகாத தக்காளி பழங்களை உடுமலை சந்தை குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.
7 / 10
ஊடுபயிர்!: திண்டுக்கல் அருகே சித்தூர் பகுதியில் வாழையில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.
8 / 10
கிராமத்து மணம்!: கோழி குஞ்சுகளுக்கு இரை போடும் குழந்தை. இடம்: உடுமலை நல்லாறு குடியிருப்பு .
9 / 10
வண்ணம் பூசும் பணி!: நொய்ந்து போன தபால் துறை மீண்டும் மத்திய அரசால் புத்துணர்ச்சி பெற்றதால் கோவை கோர்ட் வளாகத்திலுள்ள தபால் பெட்டிக்கு வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
10 / 10
எருக்கம் பூ மாலை!: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு குவிந்துள்ள எருக்கம் பூ மாலைகள்.