நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

06-டிச-2018
1 / 10
இரை தேடல்!: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் குப்பைகளில் இரைதேடி வந்த கொக்குகள் .
2 / 10
தாத்தாவின் பரிசு!: கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமிட்டு வந்த மாணவர்கள். இடம்: எம்.சி.சி.பள்ளி, சேத்துப்பட்டு.
3 / 10
விடாத மழையிலும்..!: மழைக்கு பாலீத்தீன் கவர் அணிந்து விவசாய வேலைக்கு செல்லும் பெண்கள். இடம்: உடுமலை குறிச்சிக்கோட்டை.
4 / 10
உயிர் கவசம்!: கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், விழிப்புணர்வுக்காக இலவச ஹெல்மெட் வழங்கினர்.
5 / 10
விவசாயி..!: சிதம்பரம் அடுத்து கன்னங்குடியில் டெல்டா விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல்லுக்கு உரம் போடும் பணியில் ஈடுபட்டனர்.
6 / 10
கொத்து கொத்தாய்..!: திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் காய்த்துள்ள பெரிய நெல்லிக்காய்கள்.
7 / 10
பிரதிபலிப்பு!: பிம்பத்தை தண்ணீரில் பிரதிபலிக்கும் உடுமலை அமராவதி அணை.
8 / 10
கம்பீரம்!: திண்டுக்கல் முத்தனம்பட்டி அருகே குளத்துக்கரையில் அணிவகுத்து கம்பீரமாக நிற்கும் பனை மரங்கள்.
9 / 10
எங்கும் பசுமை!: சில தினங்களாக பெய்த மழையால் நெல் வயல்கள் பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது. இடம் விழுப்புரம் மாவட்டம் சிறுவானூர்.
10 / 10
ஆஹா மழை!: சென்னையில் மாலை நேரத்தில் வெளுத்து வாங்கிய மழை... இடம்: அண்ணாசாலை.
Advertisement