நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

07-டிச-2018
1 / 10
அல்லி பூ!: சென்னையில் மனதிற்கு இதமாக பூத்து குலுங்கும் அல்லி பூ .இடம் : மணிமங்கலம்
2 / 10
அழகு மயில்!: மழை பெய்தால் மட்டும் தான் மயில் ஆடும் என்பதில்லை... தென்னந்தோப்புகளுக்குள் குளிர் அடித்தாலும் தோகை விரித்தாடுமோ இந்த மயில். கோவையை அடுத்த கரவளி மாதப்பூர்.
3 / 10
வண்ண ஸ்டார்கள்!: கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு திண்டுக்கல் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள வண்ண ஸ்டார்கள்.
4 / 10
குடை விற்பனை!: கடைவிரித்தேன் கொள்வாரில்லை.. கோவை சாமளாபுரத்தில் குடை விற்பனையில் வியாபாரி..
5 / 10
குவிந்த பூசணி!: சூலூர் அருகேவுள்ள செங்கத் துறை பகுதியில் விலையின்றி வீணாக அம்பாரம் அம்பாரமாக குவித்து வைக்கப்பட்டுள்ள வெள்ளை பூசணி
6 / 10
உழவுப் பணி!: சென்னை புறநகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சேலையூரை அடுத்த நூத்தஞ்சேரி கிராமத்தில் ஏர் உழும் பணி ஜரூராக நடைபெறுகிறது.
7 / 10
மக்காச்சோள பூக்கள்!: உடுமலை சின்னவீரம்பட்டி வயல்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் பூக்கள் பூத்துள்ளன.
8 / 10
விற்பனைக்கு!: திருப்பூர், பார்க்ரோடு பகுதியில் பனங்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளது.
9 / 10
பிரதிபலிப்பு!: சென்னை புறநகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,செல்லி அம்மன் கோயில் குளம் நிரம்பி உள்ளது, கோவிலின் கோபுரம் தண்ணீரில் பிரதிபலிக்கிறது. இடம்: மணிமங்களம்.
10 / 10
முளைத்த காளான்!: மழைக்கு வயலில் முளைத்துள்ள காளான். இடம்: உடுமலை.