நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

11-ஜன-2019
1 / 10
த்ரில் பயணம்!: ஊட்டியிலிருந்து மலைகுகை வழியாக குன்னூர் செல்லும் மலை ரயிலில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
2 / 10
எங்கும் பசுமை!: திண்டுக்கல் முத்தனம்பட்டி அருகே பசுமையாக காட்சியளிக்கும் வயல்வெளிகள்.
3 / 10
பூத்துக்குலுங்குது!: திண்டுக்கல் அருகே குஞ்சனம்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் செண்டு மல்லி பூக்கள்.
4 / 10
உணவை தேடி!: உடுமலை பெரியகுளம் தண்ணீரில் உள்ள மீன்களை திண்பதற்காக வந்துள்ள பறவைகள்.
5 / 10
அறுவடை!: பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு அறுவடை நடைபெறுகிறது இடம் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி.
6 / 10
அஸ்தமனம்!: மாலை பொழுதில் சூரியன் அஸ்தமிக்கும் அழகு. இடம்: விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம்.
7 / 10
அமைதியின் அழகு!: புது பொலிவு பெற்றுள்ள புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரி, பனி பொழியும் இரவில் அமைதியாய் இன்னும் அழகாய் தெரிகிறது.
8 / 10
துவங்கியாச்சு!: பொங்கலையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் கரும்பு மற்றும் பூளை பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
9 / 10
பனிக்கு கருகியது!: ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில், உறைபனிக்கு தேயிலை செடிகள் கருகியுள்ளன.
10 / 10
பதனி.. பதனி..!: கோவை, அரசூர் அருகே சூலுார் பிரிவு அருகே பதனி விற்கும் வியாபாரி.