நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

11-பிப்-2019
1 / 10
பார்வையாளர்கள் பரவசம்!: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு கால்நடை திருவிழாவில், கால்களை மேல் தூக்கி நடனமாடிய குதிரை, பார்வைக்கு விருந்தாக அமைந்தது.
2 / 10
வானூர்தி!: அந்தி சாயும் நேரத்தில் மேகங்களை தழுவி செல்லும் விமானம். இடம்: அடையாறு, சென்னை.
3 / 10
கூட்டணி!: கூட்டம் கூடியாச்சு அடுத்தது தேர்தல் அறிவிப்பு தான். இடம்: கோவை சிங்கநல்லூர் குளம்.
4 / 10
மராத்தான்!: புதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகரத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி 12வது ஆண்டு மராத்தான் ஓட்டம் நடந்தது.
5 / 10
மணல் சிற்பம்!: கடல் ஆமைகளை காப்பாற்றும் விதமாக சேவ் டர்ட்ல்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடந்த மணல் சிற்பப்போட்டியில் ஆர்வமுடன் சிற்பம் செய்யும் பள்ளி மாணவி. இடம்: பாலவாக்கம் கடற்கரை, சென்னை.
6 / 10
பறவைகள் கூட்டம்!: சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் நீர்நிலைகளில் இரை தேடியும், தண்ணீர் அருந்தவும் கூட்டம் கூட்டமாக குவியும் பறவைகள். இடம்: முட்டுக்காடு ஏரி, சென்னை.
7 / 10
ஆட்டு கிடாய்!: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழாவில் பல்வேறு விதமான ஆட்டு கிடாய்கள் வந்தன
8 / 10
சின்னதம்பி!: தென்னந்தோப்பிலிருந்து வீரநடை போட்டு வரும் சின்னதம்பி யானை. இடம்: உடுமலை கண்ணாடிபுத்தூர்.
9 / 10
துவக்கம்!: சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.
10 / 10
ஆர்வம்!: கடல் ஆமைகளை காப்பாற்றும் விதமாக சேவ் டர்ட்ல்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மணல் சிற்ப போட்டியில் கலந்து கொண்டு, ஆர்வமுடன் மணல் சிற்பம் செய்யும் பெண். இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை.