நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

16-மார்ச்-2019
1 / 10
மகிழ்ச்சி!: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நோட்டு புத்தகங்களை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
2 / 10
மிளகாய்!: தண்ணீர் இல்லாமல் கருகும் மிளகாய் செடிகள். இடம்: சிவகங்கை அருகே மேலவாணியங்குடி.
3 / 10
வெயில் கொளுத்துது!: கோடை வெயிலை சமாளிக்க களை கட்டியுள்ள பழ விற்பனை. இடம். தாவரவியல் பூங்கா எதிரில் புதுச்சேரி.
4 / 10
சும்மா ஒரு செல்பி!: பிளஸ் 2 கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட சில பிரிவுக்கு பொது தேர்வு முடிவடைந்தது. இதையடுத்து செல்பி எடுத்து மகிழ்ந்த மாணவிகள். இடம்: பழனியம்மாள் பள்ளி, திருப்பூர்.
5 / 10
போராட்டம்!: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து குற்றவாளிகளை அதிகபட்ச தண்டனை வழங்க கோரி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 / 10
பரிசு கோப்பை!: கடலூர் மாவட்டத்தில் பாய்மரக் கப்பல் போட்டியில் முதலிடம் வென்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
7 / 10
தீவிரம்!: தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரமடைந்துள்ளது. இடம்- ராயபுரம், சென்னை.
8 / 10
விற்பனைக்கு!: கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி- சேலம் மெயின் ரோட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள வெள்ளரி பழங்கள்.
9 / 10
விசிறி வாங்கலாமா!: கோடையின் வெப்பம் அதிகரித்து வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் வெயில் அடித்து வருகிறது. வீடுகளில் உபயோகப்படுத்த பனை ஓலை விசிறி மட்டைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பெண்கள். இடம். ஹீபர் ரோடு, திருச்சி.
10 / 10
குடையுடன்..!: வெயிலின் தாக்கம் அதிகமானதால் பிச்சை எடுப்பவர்கள் கையில் குடையுடன் அமர்ந்து இருந்தனர். இடம்: சிவகங்கை அருகே கொல்லங்குடி.