நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

15-ஏப்-2019
1 / 10
நிரம்பிய ஊரணி: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தில் ஊரணி நிரம்பியுள்ளது.
2 / 10
நாட்டிய நிகழ்ச்சி: ஸ்ரீராம நவமியை முன்னிட்டு அவிநாசி சாய் கிருஷ்ணா நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி சாய் மந்திரி மஹாலில் நடந்தது.
3 / 10
லட்சதீபம்: கடலூர் அடுத்த திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு யொட்டி லட்சதீப பெருவிழாவில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
4 / 10
விடுமுறை உற்சாகம்: பள்ளி கல்லூரி விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு காரணமாக கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
5 / 10
கடலில் குளியல்: வெயில் அதிகம் என்பதால் கடலில் குளித்த இளைஞர்கள் இடம்: புதுச்சேரி
6 / 10
கனி அலங்காரம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அய்யப்பன் கோவில், கனிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
7 / 10
பூக்கோலம்: பூக்கோலம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் ஐயப்பன் கோயிலில் போடப்பட்டிருந்த பூக்கோலம்.
8 / 10
பால்க்குடங்கள்: தமிழ் புத்தாண்டு தினமான நேற்று குன்றக்குடியில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
9 / 10
நீர் நிரம்பும் குளம்: லட்ச தீப மகோற்சவத்தை முன்னிட்டு, விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
10 / 10
கட்டட காடு: கட்டட காடாக விரிவடைந்து வரும் , ஊட்டி நகரின் ஒரு பகுதி.