நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

19-ஏப்-2019
1 / 10
உல்லாசம்...!: திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் துடுப்பு மற்றும் மிதி படகில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.
2 / 10
வந்துருச்சு...!: மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் வத்தலக்குண்டு செங்காபட்டியை வந்தடைந்தது.
3 / 10
திராட்சை அலங்காரம்: சித்ரா பௌர்ணமி விழாவை ஒட்டி திருப்பூர் ஷெரிப் காலனி காமாட்சியம்மன் கோயிலில் திராட்சையால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
4 / 10
லேட்டாயிடுச்சு..: திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 6 மணி கடந்த வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது
5 / 10
யாரும் வரலையோ...!: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடம்பூர் ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களை எதிர்பார்த்து காத்திருந்த அதிகாரிகள்.
6 / 10
சடங்கு...: ! சிவகங்கை அலங்கார அன்னை ஆலயத்தி்ல் பெரிய வியாழனை முன்னிட்டு மாவட்ட மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் பாதம் கழுவும் சடங்கு நடந்தது.
7 / 10
வாராரு..வாராரு..: .இன்று ஆற்றில் கள்ளழகர் இறங்கவதையொட்டி வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை வந்தது. இடம்: ஆழ்வார்புரம் ஏ.வி.பாலம்.
8 / 10
எல்லாம் சரியாயிருக்கா...: கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு தொகுதி ஓட்டு பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையமான தடாகம் ரோடு அரசு தொழில்நுட்பக் கல்லூரி வந்தடைந்தது.
9 / 10
எங்களின் முதல் ஓட்டு...!: தேர்தலில் முதல் ஓட்டு போட்ட மகிழ்ச்சியில் இளம் வாக்காளர்கள். இடம்:ராமநாதபுரம், கோவை.
10 / 10
ஜொலிக்குதே...!: வால்பாறையில் கோடை மழையால் பசுமையில் ஜொலிக்கும் தேயிலை எஸ்டேட்.