நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

21-ஏப்-2019
1 / 10
போலீஸ் பார்க்குதுடோய்...!: சரக்கு வாகனத்தின் மேற்கூரையில், இப்படி ஆபத்தான முறையில் ஆட்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இடம்: சிவகங்கை ரயில்வே மேம்பாலம்.
2 / 10
ஒன்றாக கூடியதோ...!: பகலில் சுட்டெரித்த வெயிலை தணிக்க மாலையில் மழையை பொழிய கூடியதோ இந்த கார்மேகங்கள். இடம்: சின்னமனூர் - மர்க்கேயன் கோட்டை ரோடு .
3 / 10
அக்கா இடிக்காம போங்க...!: தண்ணீரின் தேவை அதிகரித்து வருவதால் அதை சேகரித்து வைக்க பெரிய பிளாஸ்டிக் கேன்களை ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் வாங்கி செல்லும் பெண்கள்.இடம்: சிவகங்கை-திருப்புத்தூர் சாலை.
4 / 10
பூத்துக்குலுங்குது...!: ஊட்டி ரோஜா பூங்காவில், பூத்து குலுங்கும் ரோஜாக்கள் கண்ணை கவர்ந்தன.
5 / 10
இதாவது கிடச்சுதே...!: வறட்சி காரணமாக தீவனம் கிடைக்காமல் திரிந்த இந்த மாடுகள். லாரியில் எடுத்து செல்லும் வைகோலை திண்று பசி தீர்க்கும் இடம்: சிவகங்கை அருகே காஞ்ரங்கால்.
6 / 10
வானில் வர்ணஜாலம்...!: பெரம்பலுார் மாவட்டம், தொண்டப்பாடி கிராமத்தில் கருமேகங்கள் திரண்டு, இரண்டு வானவில் தோன்றி ரம்மியமான காட்சி.
7 / 10
நிமிர்ந்து நிற்போம்...!: அறுவடை காலமும் வந்தது, காலநிலையும் மாற்றம் கண்டது ஆனாலும் நாங்கள் நிமிர்ந்து நிற்போம் என்கிறதோ இந்த கதிர்கள். இடம்: கோவை வேளாண் பல்கலை.
8 / 10
காத்திருந்து காத்திருந்து...!: பல நாட்களாகியும் தண்ணீர் வராததால் குழாய் அருகே ஏக்கத்துடன் காத்திருக்கும் காலிகுடங்கள். இடம்: சிவகங்கை இந்திரா நகர் பகுதி
9 / 10
முத்திரை பதித்த சித்திரம்:: அந்திமாலையில் சிந்தனையை குழப்பும் இந்த சித்திரத்தை கிளிக் செய்த இடம்:ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பை.
10 / 10
பிரார்த்தனை...!: ஈஸ்டரை முன்னிட்டு பழநி மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மெழுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடந்தது
Advertisement