நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

23-ஏப்-2019
1 / 10
கடல் அலையா..!: கோடை வெயில் கொளுத்தும் நேரத்தில் கடல் அலை போல் எழுந்து சிவகங்கையை மிரட்டி ஏமாற்றிச் சென்ற கருமேக கூட்டம்.
2 / 10
குளு குளுனு இருக்குல...!: வெயிலுக்கு இதமாக தண்ணீரில் நீந்தி மகிழும் பறவைகள். இடம்:திண்டுக்கல் இராமையன்பட்டிகுளம்.
3 / 10
புத்தும்புதுப்பூ...!: திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் பூத்துள்ள கொன்றை பூக்கள்.
4 / 10
ஆர்வம்...!: பட்டப்படிப்பில் சேர விண்ணப்பங்களை வாங்கிய மாணவிகள் ஆர்வமாக பூர்த்தி செய்தனர் இடம்: பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கலை அறிவியல் கல்லூரி.
5 / 10
ஜாலி....!: ஜாலி....! ஊட்டி படகு இல்லத்திற்கு, எராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
6 / 10
கொளுத்துதே....!: கோடை வெயில் கொண்டாட்டம் பொதுமக்கள் திண்டாட்டம். இடம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதி.
7 / 10
சபாஷ்..!: நீங்கள் பார்க்கும் படம் தஞ்சை மாவட்டத்தில் விளைந்த நெற்பயிர் என நினைக்க வேண்டாம். வறட்சியில் சிக்கியுள்ள சென்னை மாநகரில் கண்ட பசுமைகாட்சி தான். இங்கு விவசாயம் செய்யும் இந்த நில உரிமையாளர் பாராட்டுக்குரியவர் தான். இடம்: போரூர் ஏரியை ஓட்டிய அம்மன் கோயில்தெரு
8 / 10
மாசடையுதே..!: ராமநாதபுரம் அருகே தாமரைக்குளம் ஊரணியில் பிளாஸ்டிக் கழிவுகளைபோட்டு மாசுபடுத்தியுள்ளனர்.
9 / 10
வாகன ஓட்டிகளே உஷார்: விருத்தாசலம் சேலம் பைபாஸ் சாலையில் செடிகள் வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் விபத்து நடக்கும் அவலம் உள்ளது
10 / 10
ஆனந்த குளியல்:: கோடை வெயில் சூட்டை தணிக்கும் வகையில் திண்டுக்கல் நீச்சல் குளத்தில் குளித்து மகிழும் சிறுவர்கள்..