நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

15-மே-2019
1 / 10
கொளுத்துது வெயில்!: சென்னையில் நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் முகத்தை முழுவதும் மூடியபடி வாகனம் ஓட்டி செல்லும் பெண். இடம்: அண்ணா சாலை, சென்னை
2 / 10
ரோஸ் கார்டன்!: ஊட்டி ரோஜா பூங்காவில், மலர்ந்துள்ள டோபுள் ரோஜாக்கள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்கிறது.
3 / 10
ரம்மியம்!: கடலூர் தாலுகா அலுவலகத்தில், மே மாசம் பூக்கக்கூடிய பூக்கள், பூத்துக் குலுங்கி ரம்மியமாக காட்சியளிக்கிறது
4 / 10
பப்பளக்குது பப்பாளி!: கோவை அடுத்த மோளபாளையம் கிராமத்தில் காய்த்துத் தொங்கும் பப்பாளி பழங்கள்.
5 / 10
நிழல் தேடி!: காய்ந்த மரத்தடியில் நிழல் தேடும் நீர்காகம். இடம்: கோவை, வாலாங்குளம்.
6 / 10
இது எறும்புகளின் கூடு!: பறவைகள் கட்டிய கூடு மட்டுமே பார்த்து பழகிய நமக்கு இந்த இலைகளால் ஆன எறும்புகள் கட்டிய கூடிய கொஞ்சம் வித்தியாசம்தான். இடம்: கோவை
7 / 10
தாகம் தீருமா?: சென்னை அடுத்த மாதாவரம் அருகே உள்ள ரெட்டேரி, தண்ணீர் தேங்கி கடல் போல் காணப்படுகிறது.
8 / 10
விற்பனைக்கு!: கோடை காலத்தையொட்டி சாலையோரம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள கிருணி பழங்கள். இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை.
9 / 10
பசுமை.. பசுமை..!: ராமநாதபுரம் அருகே அச்சடிப்பரம்பில் ஐந்தினை மரபனுப்பூங்கா, கோடையிலும் பசுமையாய் காட்சியளிக்கிறது.
10 / 10
வறட்சி!: சிவகங்கையில் மேய்ச்சல் நிலங்கள் வறண்டதால், புற்கள் இல்லாமல், செம்மறி ஆடுகள் தீவனத்திற்கு திணறி வருகின்றன.