நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

12-ஜூன்-2019
1 / 10
அஸ்தமம்!: மழை பெய்வதற்க்காக திரண்டு இருக்கும் கருமேகங்களுக்கு இடையே மறையும் சூரியன். இடம். உடுமலை.
2 / 10
இயற்கை விவசாயம்: இயற்கை விவசாயம் : செங்குன்றம் அருகே சோழவரம் , திருநிலை கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் வளரும் மரக்கன்றுகள்
3 / 10
ரம்மியம்!: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் மழை வருவது போல் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
4 / 10
உழைப்பாளர்கள்!: ஸ்மார்ட் சிட்டியின் கீழ் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் பில்லர் கம்பிகள் கட்டும் பணி நடந்துவருகிறது.
5 / 10
விளைச்சல்!: கிணற்று நீர் பாசனத்தில் விளைந்து, பச்சை பசேல் என கண்களுக்கு காட்சியளிக்கும் மொச்சை பயிர் செடிகள். இடம்: தேனி அருகே சத்திரப்பட்டி.
6 / 10
வறட்சி!: பருவமழையின்றி கடும் வறட்சியால் சாலையோர மரங்கள் கருகி வருகின்றன. இடம்: இடைய மேலுார்.
7 / 10
விவசாயத்தை காப்போம்...!: தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கோவை அடுத்துள்ள நரசிபுரம் பகுதிகளில் விவசாய நிலத்தில் சின்ன வெங்காயம் நடவு நடும் பணி நடக்கிறது
8 / 10
படகு சவாரி!: ஊட்டி படகு இல்லத்தில், மழையிலும் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.
9 / 10
மழைநீர்!: விவசாயிகள் அமைத்த கால்வாய் வழியாக உடுமலை அமராவதி அணையை நோக்கி மழைநீர் ஓடி வருகிறது.
10 / 10
சுட்டெரிக்கும் வெயில்!: ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடல் கழிமுகத்தில், வெயில் காரணமாக நீர்வற்றி பாலம் பாலமாக உள்ளது.