நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

12-ஜூலை-2019
1 / 10
தேக்குமரப் பூக்கள்: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் அழகாக பூத்துள்ள தேக்கு மரப் பூக்கள்.
2 / 10
வறண்ட குளம்: வறட்சியை தழுவி வரும் குளங்களின் நிலை இப்படி தான் வெடிப்புகளின் நடுவே இறந்த மீனின் பரிதாபம் போல். இடம்: கோவை சுண்டக்காமுத்தூர் குளம்.
3 / 10
பசுமையான மரங்கள்: மதுரை வண்டியூர் ஏரி பூங்காவில் நடைபாதை இருபுறமும் அடர்த்தியாக வளர்க்கப்பட்டுள்ள மரங்கள்.
4 / 10
மொட்டை மரங்கள்: மழையில்லாததால் திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் காய்ந்து மொட்டையான தென்னை மரங்கள்.
5 / 10
காத்திருக்கும் காகம்: இந்த வெயிலில் மனிதர்களுக்குத் தான் தண்ணீர் இல்லை என்றால் பறவைகளும் தண்ணீருக்காக அலயும் சூழல் கண்ணெதிரே தெரிகிறது வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் நிரம்பியுள்ள தண்ணீரை குடிக்க காத்திருக்கும் காகம் . இடம் : கூடுவாஞ்சேரி
6 / 10
பேரீச்சம் பழம்: சிவகங்கை சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்த பேரீச்சம் பழம்.
7 / 10
கூடைப்பந்து போட்டி: கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான கூடைபந்து போட்டியில் விளையாடும் வீரர்கள் .
8 / 10
தரம் பிரிப்பு: அறுவடை செய்யப்பட்ட தட்டைபயிர்களை தரம் பிரிக்கும் பெண்கள். இடம் .உடுமலை.
9 / 10
தண்ணீர் வேண்டும்: மனிதர்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் தான்... தலைதூக்கும் தண்ணீர்பிரச்னையால் ரோட்டோரம் தேங்கி நிற்கும் நீரை பருகி தாகம் தீர்க்கும் ஆடுகள் இடம்: ஸ்ரீவில்லிபுத்தூர்.
10 / 10
கதக்களி நடனம்: புதுச்சேரி சுகாதார துறை சார்பில் நடந்த உலக மக்கள் தொகை தின விழா பேரணியில் கதக்களி நடனம் ஆடி அந்த மாணவி.