நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

20-ஆக-2019
1 / 10
பரிதாபம்...: .மழையில்லாததால் பழநி அருகே சத்திரப்பட்டி பகுதியில் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பருத்திச் செடிகளுக்கு ஊற்றுகின்றனர்.
2 / 10
நீல வண்ண கண்ணா..!: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி விற்பனைக்காக கிருஷ்ணர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள பெண். இடம் : ஈஞ்சம்பாக்கம், சென்னை
3 / 10
மழைதூவுமா...!: விண்ணில் திரண்டு வரும் மேகக் கூட்டங்கள் மண்ணில் மழையாக தூவுமா... இடம் விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை.
4 / 10
வாங்க..வாங்க..: .விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்காக ஆந்திரா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள விநாயகர் சிலைகள். இடம்:கொசப்பெட்டை ,சென்னை.
5 / 10
ஆச்சர்யம்...!: உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு நடந்த புகைப்பட கண்காட்சியில் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. .இடம்: வைஷ்ணவா கல்லூரி. சென்னை.
6 / 10
அழகான பூ...!: திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் பூத்துள்ள முருங்கைப்பூக்கள்.
7 / 10
தயார்...!: அறுவடைக்கு தயாரான நெல் வயல்கள். இடம்: மேல்மங்கலம். தேனி.
8 / 10
வீழ்ந்தது.: .விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யப்படாத கொத்தமல்லி. இடம்: உத்தமபாளையம்.
9 / 10
காய்ந்து போச்சே....!: மழையில்லாததால் திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி பகுதியில் காய்ந்த தென்னை மரங்கள்.
10 / 10
விழிப்புணர்வு...!: உலக மனிதவள தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் .
Advertisement