நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

23-ஆக-2019
1 / 10
மழை பெய்யுமா...!: மழையை எதிர்பார்த்து வயல்களை உழுது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இடம்: திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதி
2 / 10
பச்சை போர்வை...!: சில தினங்களாக பெய்த மழையால் விவசாய நிலத்தில் உள்ள நெல் வயல்கள் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது. இடம் : திருவெண்ணெய்நல்லூர்.
3 / 10
குட்டி கிருஷ்ணர்கள்...!: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்து வந்த குட்டீஸ்கள் இடம்: சென்னை கே.கே.நகர் டைம் கிட்ஸ் பள்ளி .
4 / 10
அழகாய் பூத்ததே... !: திண்டுக்கல் அருகே மொண்டியபட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.
5 / 10
நீரின் மகத்துவம்...!: குடிதண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய கல்லூரி மாணவர்கள் இடம்: கிழக்கு தாம்பரம்
6 / 10
ஆச்சர்யம்...!: சென்னை தினத்தை முன்னிட்டு சென்னையின் அரிய புகைப்படங்களின் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஆச்சர்யத்துடன் பார்வையிடும் மாணவர்கள்.இடம்:ஆழ்வார்பேட்டை,சென்னை.
7 / 10
ஆர்ப்பரிக்குதே..!: குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளநீர்.
8 / 10
பேராபத்து..: .போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் மூட்டையை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டி.. இடம் : திருவெண்ணெய்நல்லூர் - விழுப்புரம் சாலை.
9 / 10
ஏமாற்றுதே..!: விண்ணை முட்டும் மலை முகடுகளில் மையம் கொண்டு மிரட்டிய கார்மேக்கூட்டம் மழை பொழியாமல் ஏமாற்றிச் சென்றது. இடம்: தேனி - பெரிய குளம் ரோடு.
10 / 10
நீலவண்ண கண்ணா...: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி விற்பனைக்கு வந்துள்ள கிருஷ்ணர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கும் பெண். இடம் : திருவான்மியூர் மார்கெட், சென்னை
Advertisement