நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

11-செப்-2019
1 / 10
ஓவியங்கள்!: உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்த நோயாளிகள்.
2 / 10
விவசாயிகளின் நண்பன்!: பார்ப்பதற்கு இலை போன்று காட்சி அளிக்கும் வெட்டுக்கிளி. இடம்: திருப்பூர், குன்னாங்கல்பாளையம்.
3 / 10
பூக்கோலம்!: ஊட்டி கிரசண்ட் பள்ளியில், ஒணம் பண்டிகையை மாணவிகள், பூக்கோலமிட்டு கொண்டாடினர்கள்.
4 / 10
பொய்த்தது மழை!: பருவமழை பொய்த்து போனதால் கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் நெல் பயிர்கள் கருகி வருகிறது.
5 / 10
விழிப்புணர்வு!: இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தி வள்ளுவர் குருகுலம் பள்ளி மாணவ-மாணவிகள் ஹெல்மெட் அணிந்துகொண்டு போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இடம்: தாம்பரம், சென்னை.
6 / 10
பொன் ஓணம் வந்தல்லோ...!: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி கொண்டாடிய கல்லூரி மாணவிகள். இடம்: கோவை, ராமநாதபுரம்.
7 / 10
தஞ்சம்!: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில், கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பெரிய வவ்வால்கள் தஞ்சமடைந்துள்ளன.
8 / 10
எங்கும் பசுமை!: திண்டுக்கல் அருகே கூட்டாத்துப் பட்டி பகுதியில் சோளப்பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.
9 / 10
குரங்கு சேட்டை!: குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேட்டை செய்யும் குரங்குகள்.
10 / 10
மழை.. மழை..!: திண்டுக்கல்லில் மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இடம்: திருச்சி ரோடு.
Advertisement