நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

21-செப்-2019
1 / 10
மைதானமா... குளமா...!: சென்னையில் பெய்த ஒரு நாள் மழைக்கே நீச்சல் குளமாக மாறிய கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடல்.
2 / 10
கண்காட்சி: திருப்பூர் நிப் டீ கல்லூரி ஆடை உற்பத்தி துறை சார்பில் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதை பார்வையிட்ட மாணவ, மாணவியர்.
3 / 10
சிக்குமா மீன்..!: மீன் பிடிப்பதற்காக உடுமலை அமராவதி அணையில் பரிசலில் சென்று வலையை போடும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.
4 / 10
சாகசம்..!: ரயில்வே பாதுகாப்புப் படையின் 34வது உதயநாள் விழாவில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது...
5 / 10
விழிப்புணர்வு..!: தேசிய ஊட்டசத்து மாதவிழாவையொட்டி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணியில் கோலாட்டம் ஆடினர். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகே, கோவை.
6 / 10
மவுனமித்தது ஏனோ...!: தென்னை மரங்களின் பின்னணியில் காரிருள் சூழ்ந்து மிரட்டிய வானம் மழை பொழியாமல் மவுனமித்தது ஏனோ.. இடம்: தேனி அருகே சடையால்பட்டி.
7 / 10
ஆர்ப்பரிப்பு..!: கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
8 / 10
கிடைச்சத சாப்பிடுங்க...!: வால்பாறை அடுத்துள்ள முடீஸ் தாய்முடி எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.
9 / 10
ஆடலுடன் பாடல்....!: மதுரை பாத்திமா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.
10 / 10
விலை கம்மிதாங்க...!: புதுச்சேரியில் காய்கறிகள் விலைகள் உயர்ந்து காணப்படும் நிலையில், தக்காளி விலை மட்டும் குறைந்த விலையில் விற்பனையாகிறது. புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதி
Advertisement