நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

09-அக்., -2019
1 / 10
எங்கும் பசுமை: பழநி அருகே கணக்கன்பட்டி பகுதியில் சோளப்பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.
2 / 10
ஆபத்தை அறியாதது ஏனோ?: திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் கொளுத்தும் வெயிலில் ஆபத்தான முறையில் டைவ் அடித்து குளிக்கும் பள்ளி மாணவர்கள்
3 / 10
கொஞ்சும் மழலையின் வித்யாரம்பம்: விஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல் வாசுவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யா ஆரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நெல்மணிகளில் எழுத வைக்கப்பட்டது.
4 / 10
காற்றாலை சொல்லும் பாடம்: காற்று மட்டும் அல்ல அனைத்துமே ஒரு நாள் நமக்கு எதிராக திசை திரும்பும், இந்த காற்றாலைகள் நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இடம் : கோவை பாப்பம்பட்டி
5 / 10
கிளியின் மொழியில்..: கிளி பேச்சு ... ஊர்ல சுற்றி திரிந்த நம்மல புடுச்சு பல வருசமா வெச்சிருக்காங்க நமக்கு விடுதலை கிடைக்குமா என்ற பேச்சில் பச்சை கிளிகள். இடம்: வ.உ.சி., உயிரியல் பூங்கா, கோவை.
6 / 10
பிரம்மோற்சவம் நிறைவு: திருப்பதி திருமலை பிரம்மோற்சவ நிறைவு விழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
7 / 10
நாவினில் எழுதும் வித்யாரம்பம்: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு குழந்தைகளுக்கு நாக்கில் வித்யாரம்பம் எழுதினர்.
8 / 10
குளு குளு படகு சவாரி..: ஊட்டி படகு இல்லத்திற்கு, தொடர் விடுமுறையால் எராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
9 / 10
துளிர்விடும் பனை: இளைஞர்களின் முயற்சி சபாஷ் : விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு ஏரிக்கரையில் இளைஞர்கள் பதியம் செய்த பனைவிதைகள் தற்போது துளிர்விட்டு வளர்ந்து வருகிறது.
10 / 10
சிங்கார சென்னையில் சிறிய துர்கா..: துர்கா பூஜையை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட துர்கா சிலைகளை படகு மூலம் கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட்டன... இடம் : பட்டினப்பாக்கம்.
Advertisement