நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

20-அக்-2019
1 / 10
நாற்று நடுறோம்...!: மழை பெய்ததையடுத்து திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி ஆலங்குளம் பகுதியில் நெல்நாற்று நடும் பணியில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்/.
2 / 10
பசுமை காட்சி....!: பட்டாம்பூச்சி நீரில் சம்பங்கி. பட்டாம்பூச்சி சொட்டு நிர் பாசன கருவி மூலம் நீர் பாய்ச்சி பசுமையாக வளர்ந்துள்ள சம்பங்கி பூக்கள். இடம் . சிவகங்கை அருகே களரி பட்டி.
3 / 10
ஆர்ப்பரிக்குதே...: உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 / 10
ஜாலி...!: தினமலர் செய்தி எதிரொலியாக ஏரிகள் மற்றும் கோவில் குளங்கள் சுத்தம் செய்யப்பட்டதால் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில்குளம் நிறைந்த நீரில் அழகாக நீந்தி செல்லும் வாத்துக்கள்.
5 / 10
தனி விலைதான்..!: தள்ளு வண்டியில் விற்றாலே தனி விலைதான். ஆமாங்க ஒரு கிலோ ஆப்பிள் நூறு ரூபாயாம். இடம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்.
6 / 10
நல்ல அறுவடை..: கள்ளக்குறிச்சி, மாவட்டத்தில் கம்பு அறுவடை தொடங்கியுள்ளது. அதையொட்டி சோமன்டார்குடியில் பல ஏக்கர் பரப்பளவில் விளைந்துள்ள கம்புகளை அறுவடை செய்யும் பெண்கள்.
7 / 10
துள்ளல்...: கோவை கொடிசியாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் கலை இலக்கிய போட்டிகள் நடந்தது இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் திறமையை காண்பித்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
8 / 10
அணையா விளக்கு...!: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குகள் செய்யும் பணியில் ஈடுப்ட்டுள்ள தொழிலாளி.இடம்: ராயப்பேட்டை, சென்னை.
9 / 10
நல்ல விளைச்சல்..!: மழையால் வளர்ந்துள்ள சோளப்பயிர், இடம்: பாலக்கோன்பை அருகே ராயவேலூர்.
10 / 10
ரம்மியம்..!: தொடர் மழையால் கொடைக்கானல் மனோரத்தினம் அணை முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Advertisement