நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

22-அக்-2019
1 / 10
ஆர்ப்பரிக்குதே...!: தொடர் மழையால் போடி அணைப்பிள்ளையார் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்.
2 / 10
மறியல் இல்லீங்கோ...!: பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி ., சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன
3 / 10
வீர வணக்கம்...!: பணியின்போது இறந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இடம்: திருச்சி ஆயுதப்படை மைதானம்
4 / 10
எனக்கு பிடிச்சது...!: தீபாவளியையொட்டி கோவை பஜார் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிடித்த ஆடையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர் இடம் : கிராஸ் கட் ரோடு
5 / 10
ரம்மியம்..: .கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பதிவாகி வந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகங்கள் ஆங்காங்கே சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்த இடம் குறிச்சி குளம் .
6 / 10
ருசியா இருக்குமா..!: காரைக்குடி நூறு அடி சாலையில் விற்பனைக்கு குவிந்துள்ள சிவப்பு கொய்யா.
7 / 10
பசுமை காட்சி..!: விருதுநகர் மாவட்டத்தில் மழை கொட்டி வருவதால் வயல்வெளிகள் பசுமையாக காட்சியளிக்க அதை உண்டு மகிழும் ஆட்டுக்கூட்டம். இடம்: சுந்தரநாச்சியாபுரம், ராஜபாளையம்.
8 / 10
முகம் பார்க்குதோ..: காலை பனிப்பொழிவு நேரத்தில் உழவு வயலில் தேங்கிய தண்ணீரில் முகம் பார்த்து ரசித்த தென்னை மரங்கள். இடம்: ஜெயமங்கலம்.
9 / 10
நடவுக்கு ரெடி...: பழநி அருகே அய்யம்புள்ளி பகுதியல் நெல் நாற்று நடவுக்காக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
10 / 10
நேர்த்திக்கடன்...!: திண்டுக்கல் மாவட்டம் அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் உடலில் அக்னி சட்டிகள் கட்டி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்.
Advertisement