நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

23-அக்-2019
1 / 10
திறமை....: ! புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்கம், ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில் குழந்தை விருது 2019 க்கான போட்டியில் திறமையை காண்பித்த மாணவிகள். இடம்: தட்டாஞ்சாவடி சேக்கிழார் உயர்நிலைப் பள்ளி
2 / 10
திரும்பிடுச்சே....!: வாலாஜாபாத் வட்டாரத்தில் நீரின்றி கருகி வந்த நெற்பயிர் மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இடம்: மணியாட்சி.
3 / 10
அழகாய் பூத்தது....!: திண்டுக்கல் அருகே கள்ளிப்பட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.
4 / 10
எடுப்பா இருக்குல...!: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய கடைவீதியில் புத்தாடைகளை தேர்வு செய்யும் பொதுமக்கள்.
5 / 10
அழகு காட்சி....': ஊட்டி தாவரவியல் பூங்காவில், மழைக்கு அழுகிய மலர் தொட்டி செடிகள் அகற்றி புது மலர்தொட்டி செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
6 / 10
பசுமைக்கு திரும்பியது...!: கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன் மலையில் தொடர் மழையால் கீழ் பரிகம் கிராமத்தில் விவசாய நிலங்கள் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது.
7 / 10
தவழ்ந்து போகுதே...!: மலைகளின் இடையே தவழ்ந்து செல்லும் வெண்மேகக் கூட்டங்கள். இடம் .உடுமலை.
8 / 10
அலர்ட் சொல்ல வந்ததோ.: . கோவையில் ஆங்காங்கே பெய்த கன மழைக்கு நடுவே மாலைவேளையில் ரெட் அலர்ட்டை அவுட் செய்ய பல கலர்களில் அலர்ட் சொல்ல வந்ததோ இந்த வானவில்கள். இடம் கோவை போத்தனூர்
9 / 10
நிறைய கிடைக்கனும்...!: சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் கடற்கரை அருகே அலையில் அடித்து வரப்படும் மீன்களை பிடிப்பதற்க்கு வலை வீசும் மீனவர் .இடம் : பட்டினம்பாக்கம்
10 / 10
விழிப்புணர்வு: திருப்பூரில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நன்னீரில் உற்பத்தியாகும் கொசு புழுக்களை பார்வையிட்ட மாணவ, மாணவியர்.
Advertisement