நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

11- டிச.,-2019
1 / 10
தீப ஒளியில் ஜொலித்தது...: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெரிய கார்த்திகையை முன்னிட்டு தீபங்களால் ஜொலித்தது.
2 / 10
திண்டுக்கல்லில் தீப விழா: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் உடனமர் அபிராமி அம்மன் கோயிலில் விளக்கேற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.
3 / 10
மலை தீபம்...: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபம் ஏற்றப்பட்டது
4 / 10
நெல் நாற்று நடுகையில்...: பழநி அருகே பாலாறு அணைப் பகுதியில் நடப்பட்ட நெல் நாற்றுகள் வயலில் கோடு போட்டது போல் தெரிகிறது.
5 / 10
கடலான புழல் ஏரி...: நீர் இருப்பு அதிகரித்து வருவதால், கடல் போல் காட்சியளிக்கும் சென்னை புழல் ஏரி...
6 / 10
கல்லறையிலும் கலந்த நீர்...: தற்போது பெய்த மழையால் சென்னை நந்தம்பாக்கம் சாம்ராஜ்ய யுத்த கல்லறை தோட்டத்தில் தண்ணீர் தேக்கி குட்டை போல் காட்சியளிக்கின்றது.
7 / 10
மலை உச்சியில் மகா தீபம்...: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 2688 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
8 / 10
பச்சை பசேலென சம்பா சாகுபடி...: வடகிழக்கு பருவமழை செய்ததை தொடர்ந்து விருத்தாசலம். சேலம் பைபாஸ் சாலையில் சம்பா சாகுபடி நெல் பயிர் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது.
9 / 10
நீரம்பியது குளம்...: முடிச்சூர் லட்சுமி நகரில் சமீபத்தில் தூர்வாரப்பட்ட குளத்தில் நிரம்பியுள்ள மழை நீர் .
10 / 10
காலாண்டரால் நிறைந்தது கடை...: தினமலர் நாளிதழ் காலாண்டர் மூலம் அலங்கரிக்கப்பட்ட மதுரை பெத்தானியபுரம் கடை.