நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

15-டிச.,- 2019
1 / 10
மடை திறந்த வெள்ளம்போல்...: தொடர்மழை காரணமாக கடலூர் திருவந்திபுரம் அணைக்கட்டில் கரைபுரண்டோடும் வெள்ளம்.
2 / 10
அழகான அல்லி மலர்...: நீர் மாசின்றி இருக்கிறது என்பதற்கு சாட்சியாக கோவை நரசம்பதி குளத்தில் பூத்துக்குலுங்கும் அல்லி மலர்கள்.
3 / 10
இரை தேடி...: பழநி ஆயக்குடி வீரகுளத்தில் இரை தேடி வந்த பறவைகள்.
4 / 10
பச்சை பயிர்கள்...: திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பகுதியில் நெல்வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.
5 / 10
இயற்கையின் மடியில்...: இயற்கையில் திளைத் திருப்பதே பாக்கியம் தான். இடம்: நீலகிரி மாவட்டம் கோடநாடு ரோடு.
6 / 10
நீராவி எஞ்சின் ரயில்...: இளைய சமுதாயத்தினரும், வெளிநாட்டினரும் இந்திய ரயில்வேயின் பெருமையை அறிந்துகொள்ளும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை பாரம்பரிய நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் நேற்று இயக்கப்பட்டது.
7 / 10
வெங்காய நடவு...: மழை பெய்ததை தெடர்ந்து ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சி பகுதியில் வெங்காயம் நடவு செய்ய உழவு பணி நடந்தது.
8 / 10
மாணவியர் விழிப்புணர்வு...: போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் நடந்தது. இதில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவியர்.
9 / 10
நாட்டுக்கோழி வளர்ப்பில்...: கோவை உப்பிலிபாளையம் பகுதியில் வீட்டுமாடியில், வளர்ப்பில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வரும் தம்பதியினர்.
10 / 10
சாரல் மழையில்...: திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே சாரல் மழையில் நடந்து சென்ற பெண்கள்.
Advertisement