நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

14-ஜன.,-2020
1 / 10
கொத்தமல்லி விதைகள் ...: உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கொத்தமல்லி விதைகள் ஓழுங்கு முறை விற்பனை கூட களத்தில் காயவைக்கப்பட்டுள்ளன.
2 / 10
வையாளி கண்டருளிய நம்பெருமாள். ..: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் எட்டாவது நாள் வையாளி கண்டருளிய நம்பெருமாள்.
3 / 10
வெங்காயப் பூ,...: கண்ணுக்கு அழகாக காட்சியளிக்கும் வெங்காயப் பூ, கடந்த சில தினங்களுக்கு முன்பு பலரது கண்களுக்கு கண்ணீர் வர வைத்த பூ .இடம் .கோவை, வடவள்ளி
4 / 10
கரும்புப் பூ ...: கோவை கள்ளிமடை பகுதியில் பூத்துகுலுங்கிய கரும்புப் பூ.
5 / 10
குழந்தைகளின் பொங்கல்...: புதுச்சேரி குளுனி பள்ளியில் நடந்த பொங்கல் திருவிழாவை ஒட்டி குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்
6 / 10
இனிப்பான கரும்பை போல் ...: இனிப்பான கரும்பை போல் தை திருநாள் அமையட்டும். சூடு பிடிக்கும் கரும்பு விற்பனை. இடம்: கோவை பூ மார்கட்
7 / 10
எசிகோ கப்பல் ...: கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான எசிகோ என்ற ரோந்து கப்பல் சென்னை துறைமுகத்திற்கு நேற்று வந்தது. கப்பலை கொடியசைத்து வரவேற்ற பள்ளி மாணவர்கள். இடம் சென்னை துறைமுகம்
8 / 10
வண்ண கோலப் பொடிகள்...: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்கெட்டில் வைக்கப்பட்டிருந்த வண்ண மையமான கோலப் பொடிகள்.
9 / 10
பொங்கல் கொண்டாட்டம்...: கோவைப்புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டம்.
10 / 10
காலை பனியில் கதிரவன்...: காலை பனியில் மரத்திற்கு பின்னால் சிவப்பு நிறத்தில் வரும் சூரியன். இடம் .உடுமலை.
Advertisement