நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

18-ஜன-2020
1 / 10
உல்லாச பயணம்.: ..பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை சேத்துப்பட்டு ஏரியில் படகு சவாரி செய்ய குவிந்த சுற்றுலா பயணிகள்.
2 / 10
பச்சை நிறமே. . பச்சை நிறமே.: . குன்னூர் அருகே வாய்க்கால்பட்டியில் பச்சை பசேலென காட்சியளிக்கும் நெற்பயிர்கள்.
3 / 10
மூடுபனி...!: காலையில் பனி படர்ந்து காணப்படும் ரோட்டில் விளக்குகளை எரியவிட்டு வரும் வாகனங்கள் .இடம். உடுமலை புக்குளம் .
4 / 10
பட்டம் பறக்கட்டும்..: .காணும் பொங்கலையொட்டி விற்பனைக்கா வைக்கப்பட்டுள்ள வண்ண வண்ண பட்டங்கள் . இடம்: விருத்தாசலம், ஸ்டேட் பேங்க் அருகில்.
5 / 10
ஆர்வம்....!: சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்துவரும் புத்தககண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வமுடன் பார்வையிடும் புத்தகப் பிரியர்கள்.
6 / 10
பசிக்குது பொங்கல் வைங்கோ...!: பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழாவுக்காக, புல்மேட்டில் மாலை அணிவித்து, அலங்காரம் செய்து நிறுத்தப்பட்ட யானைகள், ஒரே சமயத்தில் தும்பிக்கையை உயர்த்தி பிளிறியது.
7 / 10
அழகோ அழகு...!: இயற்கையின் அழகுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பதற்கு இவ்விடமும் ஒரு சாட்சி. இடம்: கோவை கோளராம்பதி குளம் .
8 / 10
ரொம்ப தான் சீறுதே..!: மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளையை அடக்க முயலும் வீரர்கள்.
9 / 10
விடமாட்டேன்டோய்: மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் துள்ளி குதித்த காளையின் திமிலை அடக்க முயலும் இளைஞன்.
10 / 10
பிடிடா மாப்ளே....: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்கிய வீரர்கள்.