நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

25-ஜன-2020
1 / 10
வீர நடை...!: கோவை வ.உ.சி., மைதானத்தில் குடியரசு தின விழா ஒத்திகை அணி வகுப்பீல் கம்பீர நடை போட்ட காவலர்கள்.
2 / 10
உற்சாகம்..: .சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் நடந்து வரும், வைஷ்ணவ் பஜாரில் வைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில், விளையாடி மகிழ்ந்த மாணவியர்.
3 / 10
விழிப்புணர்வு...: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்களிப்பதின் அவசியம் குறித்து விளக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள். இடம்: சென்னை அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்லூரி.
4 / 10
காலை தென்றல்....: காலை வேளையில் மரங்களுக்கிடையே விழும் சூரிய கதிர் ஒளி. இடம்: பெசன்ட் நகர், சென்னை.
5 / 10
காரம் குறையாது..: .சிவகங்கை அருகே லட்சுமிபுரத்தில் விளைந்துள்ள பஜ்ஜி மிளகாய்.
6 / 10
சாகுபடி அமோகம்...!: கம்பம் அருகே ஆங்கூர்பாளைத்தில் வாழையில் ஊடுபயிராக செண்டுப் பூக்கள் சாகுபடி செய்துள்ளனர்.
7 / 10
அறுவடைக்கு தயார்...: கமுதி அருகே பெருநாழி பகுதியில் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சூரிய காந்தி செடிகள்.
8 / 10
பார்த்து ரசிக்கிறோம்...!: மூணாறு தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை பார்த்த ரசித்த பள்ளி மாணவர்கள்.
9 / 10
கலைநயம்...: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனித நேய வார விழா கண்காட்சியை ரசித்த மாணவியர் .
10 / 10
எதிர் நீச்சல்...: சென்னை, வேளச்சேரி நீச்சல் குளத்தில் நடந்த நீச்சல் போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவர்கள்.