நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

26-மார்ச்-2020
1 / 10
பிடிங்க நல்லா சாப்பிடுங்க..: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனை வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
2 / 10
சொன்னா கேட்கமாட்டீங்க.: ..கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை போலீசார் தங்கள் பாணியில் கவனித்தனர்.
3 / 10
எச்சரிக்கும் போலீசார்: தொற்று நோய் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். இடம் கோவை சிங்காநல்லூர் சிக்னல்
4 / 10
ஒய்வு...!: எப்போது வாகனங்களால் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடி உள்ள சென்னையின் முக்கிய சாலை.
5 / 10
ஊர்வலமா போறோம்..: .கொரோனா வைரஸ் பீதியால் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு நாடெங்கும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன இதனை தொடர்ந்து பஸ் நிலையத்திற்க்கு வந்தவர்களை காவல் துறையினர் வேனில் ஏற்றி ஆதரவற்ற இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர்
6 / 10
தழுவுதே..: .கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவால் சாலையில் போக்குவரத்து குறைந்து. மரத்தில் இருந்து விழுந்த பூக்கள் தார் சாலையை தழுவி விடுகிறதே... இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை.
7 / 10
பாதுகாப்பு...: ராமநாதபுரத்தில் கொரோனா பீதியால் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசார்.
8 / 10
யாரையும் காணோம்....: கொரோனா எதிரொலியாக 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் பழனி மலை அடிவாரம்.
9 / 10
குவிந்த மக்கள்..: .அரசு உத்தரவுபடி அத்தியாச பொருட்கள் மட்டும் வழங்கலாம் என்று கூறியதால் கோவை உக்கடத்தில் விற்கப்பட்ட காய்கறிகள் மற்றும் கீரைகள் வாங்க குவிந்த மக்கள்.
10 / 10
அடிக்காதீங்க சார்..: கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு மீறி இருசக்கர வாகன வந்தவர்களுக்கு திருப்பூர் போலீசார் கவனித்தனர்.
Advertisement