நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

27-மார்ச்-2020
1 / 10
தனி ஒருவன்.: .முகத்தில் துண்டை கட்டி கொண்டு தள்ளு வண்டியை இழுத்து செல்லும் முதியவர்.இடம். உடுமலை.
2 / 10
ஒய்வெடுக்கிறது..: எப்போதும் வாகனங்களால் மூச்சுதிணற வைக்கும் சென்னை திருவான்மியூர் காமராஜர் சாலை 144 தடை உத்தரவால் ஒய்வெடுக்கிறது:
3 / 10
எனக்கு மாஸ்க் இல்லையா ?: ..இவங்க பாதுகாப்புக்கு முக கவசம் போட்டுட்டாங் வீட்ட பாதுகாக்குற நமக்கு ஒரு முக கவசம் போடனும்னு தோனலையே... இடம்:திருப்பூர், கே.எஸ்.சி.,பள்ளி ரோடு.
4 / 10
பசி தாங்கல..: 144 தடை உத்தரவு பிறப்பித்த போதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மக்களுக்காக வெயிலை கூட பொருட்படுத்தாமல் ரோட்டோரத்தில் நின்றுகொண்டே மதிய உணவருந்தினர். இடம் கோவை கணபதி
5 / 10
இதுதேவையா: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது குடும்பத்துடன் ஜாலி ரெய்டு செல்லும் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது யார்.
6 / 10
விதி மீறல்..: .ஊரடங்கு உத்தரவை மதிக்காத வாகனங்கள் கூடுதல் கட்டணங்களை பெற்றுக்கொண்டு வெளியூர் செல்லும் மக்களை ஏற்றி சென்றனர். இடம்: மதுராந்தகம் சாலை. குரோம்பேட்டை
7 / 10
சொன்னா கேளுங்க ....: கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து தப்பிக்க யாரும் வெளியில் வர வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இடம் : கோவை, புலியகுளம்
8 / 10
தில்லான பாட்டி தான்...: ஊரடங்கு உத்தரவால் அனைத்து வாகனங்களும் தடைசெய்யப்பட்ட போதிலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் தண்ணீர் வண்டியில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மூதாட்டி. இடம்: கடலூர் பாரதி சாலை
9 / 10
கொரோனா அழியனும்..: .வைரஸ் கிருமிகளை அழிக்க வேப்பிலை, மஞ்சள் நீர் மற்றும் கோமியத்தை கலந்து வீதியில் தெளித்த பெண்கள் மற்றும் இளைஞர்கள்.இடம்: கோவை, உடையாம்பாளையம்
10 / 10
அறுவடை அமோகம்...: தேனி மாவட்டம் கூடலூர் ஒழுகுபுளியில் இயந்திரம் மூலம் இரண்டாம் போக நெல் அறுவடை பணி நடக்கிறது.
Advertisement