நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

08-ஏப்.,-2020
1 / 10
ரம்மியம்: ஊரடங்கு உத்தரவால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால் ரம்யமாக அமர்ந்துள்ள மயில். இடம்: பழநி பைப்ரோடு.
2 / 10
கொரோனா வந்திருக்காம்: கொரோனா வந்திருக்காம். சாலைக்கு போகாதேன்னு சொன்னா... சொல்ற பேச்சே கேக்றதில்ல. இனி கடுமையான உத்தரவு போட்டாச்சு! போகாதே..., என்று ஆறறிவு படைத்த மனிதனுக்கு கூறுகிறதோ, இந்த குரங்கு குடும்பம். இடம்: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை, நீலகிரி மாவட்டம்.
3 / 10
விவசாய பணி: திருப்பூர் ஆட்டையம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் கத்தரி பறிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்.
4 / 10
ஓய்வெடுக்கும் ஆதவன்: கொரோனா வைரஸ் கிருமியை சுட்டெரித்து மக்களை பாதுகாத்துவிட்டு மாலையில் ஓய்வு எடுக்க செல்லும் ஆதவன்.இடம்: சிவகங்கை மதுரை ரோடு ஆர்ச்.
5 / 10
அறிவுறுத்தல்: சென்னையில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருக்கும் பகுதிகளில் ட்ரோனில் ஒலிப்பெருக்கி பொருத்தி அதன் மூலம் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தும் போலீசார். இடம்:புதுப்பேட்டை.
6 / 10
முக்கியத்துவம்:: தன் தொழில் செய்யாதவனுக்கு தலை அளவு பஞ்சம் என நம் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க விவசாயத்தின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறைக்கு உணர்த்தும் விவசாயி. இடம் : மன்னவனுர் வயல்
7 / 10
அழகு மயில்: கொரோனோ வைரசால் ஊரே முடங்கிக் கிடக்க அமைதியாக போன ஊரில் அழகாய் அமர்ந்த மயில். இடம்: கோவை வடவள்ளி.
8 / 10
விழிப்புணர்வு ஓவியம்: விழுப்புரம் மாவட்டம் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் முன்பு, மாவட்ட ஓவியர் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை பார்த்துக்கொள்ள விழித்திரு,விலகி இரு,வீட்டில் இரு, என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா அரக்கன் ஓவியத்தை வரைந்து உள்ளனர்.
9 / 10
சம்மங்கி பூக்கள்: கொரோனா பாதிப்பால் உரிய விலை கிடைக்காததால் சம்மங்கி பூக்களை பறிக்காமல் செடியிலே விட்டுள்ளனர். இடம்: தேனி அருகே வயல்பட்டி
10 / 10
இலவங்காய்கள்: சீசனை முன்னிட்டு திண்டுக்கல் அருகே தவசிமடை பகுதியில் காய்த்துள்ள இலவங்காய்கள்.
Advertisement