புகைப்பட ஆல்பம்:

பொங்கல் விழா காட்சிகள் !
1 / 36
திருப்பூர் நொய்யல் கரையில் பொங்கல் விழா நடந்தது. அதில் நடந்த கும்மியாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
2 / 36
ஊட்டி தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பாக நடந்த பொங்கல் விழாவில் நடந்த படுகர் நடனத்தில் சுற்றுலா பயணிகளும் நடனமாடினார்கள்.
3 / 36
ஊட்டி தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பாக நடந்த பொங்கல் விழாவில் , சுற்றுலா பயணிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
4 / 36
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோ சாலையில், பசு மாடுகளுக்கு கீரை மற்றும் பழங்கள் வழங்கி வழிபட்ட பொதுமக்கள்.
5 / 36
மாட்டு பொங்கலை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் உள்ள கோசாலையில், மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
6 / 36
நொய்யல் கரையில் திருப்பூர் பொங்கல் விழா நடந்தது. அதில் பொங்கல் வைத்த பெண்கள்.
7 / 36
பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை அலங்கார அன்னை ஆலயத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
8 / 36
பொங்கலையொட்டி உடுமலை காந்திசவுக் வலம்புரி வெள்ளி விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
9 / 36
பொங்கல் பண்டிகையையொட்டி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது.
10 / 36
பொங்கல் பண்டிகை முன்னிட்டு காரமடை நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் கமிஷனர் பால்ராஜ் முன்னிலை வகிக்க நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கவுன்சிலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
11 / 36
புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மனமகிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
12 / 36
புதுச்சேரி நகரப் பகுதியில் பாரம்பரியமான பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கிணங்க போகிப் பண்டிகை கொண்டாடினர்.
13 / 36
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மார்கெட் பகுதியில் பூ கடையில் பூக்கள் வாங்கும் பெண்கள்.
14 / 36
கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள டுட்டோரியல் காலேஜில் அனைத்து மத மாணவிகள் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
15 / 36
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் அங்கன்வாடி மையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
16 / 36
திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சி சமத்துவபுரத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலெக்டர் விசாகன் கலந்து கொண்டார்.
17 / 36
பொங்கல் திருவிழாவை ஒட்டி கடலூர் எஸ்பி அலுவலகத்தில் சமத்துவ பொங்கலை எஸ்.பி., சக்திகணேசன் தொடங்கி வைத்துக் கொண்டாடினார்.
18 / 36
பொங்கல் விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மண்டல தலைவர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடினர்.
19 / 36
புதுச்சேரி லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் பொங்கல் திருவிழா பெண் கல்வி துணை இயக்குனர் சிவராம ரெட்டி தலைமையில் நடந்தது
20 / 36
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இதயா மகளிர் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
21 / 36
புதுச்சேரி உழவர்கரை தொகுதி பாஜக சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு அமைச்சர் நமச்சிவாயம் ஏழைகளுக்கு நலத்தட்டு உதவி வழங்கினார் அருகில் சிவசங்கர் எம்எல்ஏ சரவணன்
22 / 36
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இதயா மகளிர் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடினர்
23 / 36
சிவகங்கை அரசு பெண்கள் கல்லூரியில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
24 / 36
சமத்துவ பொங்கல் விழா கோவை மருதூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.இதில் தலைவர் பூர்ணிமா ரங்கராஜ், துணைத் தலைவர் தேன்மொழி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
25 / 36
சிவகங்கை அரசு மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
26 / 36
காரமடை ஆர் வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவிகள் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்
27 / 36
திருப்பூர், மாஸ்கோ நகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குழந்தைகளின் கரகாட்டம் நடன நிகழ்ச்சி நடந்தது.
28 / 36
திருப்பூர், குமரன் மகளிர் கல்லூரியில் மாணவியர் பொங்கல் வைத்தனர்.
29 / 36
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள மஞ்சள் கிழங்கு.
30 / 36
கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில், நாட்டுப்புற கலையான சிலம்பம் சுற்றிய பெண்கள்.
31 / 36
பொங்கலை முன்னிட்டு திருப்பூர், குமரன் மகளிர் கல்லூரியில் மாணவிகள் பொங்கல் வைக்க பானை, கரும்புடன் வந்தனர்.
32 / 36
கோவை காந்திபுரம் அருகேயுள்ள சுகுணா ரிப் வி பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
33 / 36
சென்னை, சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் உறியடிக்கும் போட்டியில் கலந்துகொண்ட மாணவியர்கள் மற்றும் ஆசிரியைகள்.
34 / 36
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கிராமிய நடனங்கள் ஆடிய மாணவியர்கள்.
35 / 36
விழுப்புரம் மாதிரி மங்கலம்பெரியார் சமத்துவபுரத்தில்பொதுமக்களுடன் கலெக்டர் மோகன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
36 / 36
உடுமலை ஆர்.ஜி.எம்.மேல்நிலைப் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் மகிழ்ச்சியுடன் பொங்கல் வைக்கும் மாணவியர்கள்.
Advertisement