NRIஆல்பம்:

1 / 10
சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மகளிர் பிரிவான வளர்பிறை மகளிர் வட்டம் அனைத்துலக மகளிர் தின விழாவை மார்ச் 11 ஆம் தேதி மாலை முகநூல் மற்றும் வலையொளிவழி நேரலையாக மிகச் சிறப்பாக நடத்தியது
2 / 10
உலக மலையாளி பேரவையின் மலேசியக் கிளையின் மகளிர் பிரிவின் சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஷாலபங்கல் சிரிப்பு, தகவல் அமர்வு, விளையாட்டுகள், ஷாப்பிங், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல இடம் பெற்றன
3 / 10
மகாகவி சுப்பிரமணி பாரதியாரைக் கொண்டாடும் விதம் அமீரகத்தில் கர்நாடக இசையை பயிற்றுவிக்கும் ராதிகா ஆனந்த் நடத்தி வரும், மோஹனா குழுவினரின் தொடர் நிகழ்ச்சிகள் துபாயில் உள்ள துணைத் தூதரக வளாகத்தில் நடைபெற்றது
4 / 10
சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் மார்ச் 12 முதல் 18 வரை மிகச் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகத்தின் நிறைவு விழாவாக 19 ஆம் தேதி ஏக தின லட்சார்ச்சனை மிகச் சிறப்பாக நடைபெற்றது
5 / 10
ஆஸ்டின் தமிழ் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வகுப்பில் உள்ள மாணவர்கள் அவர்கள் கற்றுக் கொண்ட தமிழ் அறிவைச் சார்ந்து நிகழ்ச்சிகள் மேடையில் வழங்கினர்
6 / 10
மெல்போர்ன் டாக்கீஸ் படைப்பில் அமைந்த ‘கலவரத்தில் ஒரு காதல்’ மேடை நாடகம், மெல்போர்ன் டாக்கீஸ் நாடகக் குழுவினர் மற்றும் குயீன்ஸ்லாந்து தமிழ்ச்சங்க ஆதரவுடன் பிரிஸ்பேனின் கூர்ப்பரூ பள்ளி கலையரங்கில் கடந்த சனிக்கிழமை, 18 மார்ச் மாலை அரங்கேறியது
7 / 10
குவைத் தமிழ்ச் சங்கத்தின் 17ஆம் ஆண்டு மாபெரும் பொங்கல் விழா மகபூலா இன்னோவா பள்ளியில் 03-03-2023 வெள்ளி அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
8 / 10
தி ஹிந்து கவுன்சில் ஆப் ஆஸ்திரேலியா சார்பில், சிட்னி மாநகரில் உத்ஸவ் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சம்ஸ்கிருதி பரத நாட்டியப்பள்ளி ஹம்சா வெங்கட்டின் மாணவ மாணவிகள் பங்கு பெற்ற, இந்தியாவின் பல்வேறு மாநில கிராமிய நடனங்களின் தொகுப்பாக இது இருந்தது
9 / 10
சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகத்தின் ஒரு பகுதியாக 17 ஆம் தேதி அன்னையின் அகங் குளிர வஸ்த்ர சமர்ப்பண வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது
10 / 10
கத்தார் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த மகளிர் தின சிறப்புக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. சாதனைப் பெண்கள், மற்றும் மருத்துவத்துறையில் சேவை செய்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்
Advertisement