NRIஆல்பம்:

1 / 10
கொரியாவில் நடைபெற்ற புசான் பன்னாட்டு கலை விழாவில் கொரிய தமிழ்ச் சங்கம் கலை பண்பாட்டு அரங்கு அமைத்து, தஞ்சாவூர் பொம்மைகள், பறை, புல்லாங்குழல், வேட்டி, சேலைகளை காட்சிப்படுத்தியது. தஞ்சாவூர் பொம்மைகளை கொரிய மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்
2 / 10
பாலஸ்தீனத்தின் ஜெரிச்சோ நகரில் உள்ள டெர்ரா சாண்டா பள்ளிக்கூடத்தில் ’இந்தியாவில் ஒற்றுமை’ என்ற கருப்பொருளில் ஓவியப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் பள்ளிக்கூட மணவ, மாணவியர் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
3 / 10
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தி, குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எழுந்து ஆட வைத்தும், அரங்கமே அதிரும்படியான ஓர் ஆர்ப்பரிக்கும் இன்னிசை நிகழ்ச்சியை பாடகர் மனோ அளித்தார்
4 / 10
அமெரிக்காவின் வளைகுடா பகுதியில் எட்டு தமிழ் பள்ளிகளில் கற்ற 147 மாணவர்களுக்கு, 70க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆய்வறிஞர்கள் முன்னிலையில், பட்டமளிப்பு விழா மிகவும் கோலாகலத்துடன் நடைபெற்றது.
5 / 10
குவைத் இந்தியன் பிரன்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் கோலாகல வெள்ளிவிழாவில் அந்துமணியின் நூல்களும், இந்த அமைப்பின் நிறுவனர் என்.சி. மோகன்தாஸ் தன் குழுவினர் சுப்பு-ஹரி-ஆனந்துடன் உருவாக்கியுள்ள இந்திய டூரிசம் நூலும் வெளியிடப்பட்டன
6 / 10
இலங்கை நல்லூர் சிவன் ஆலய அம்மன் வாசல் கொடியேற்ற நிகழ்வின் சிறப்பம்சமாக, கொடியேற்ற நிகழ்வின் பின் இடம் பெற்ற நவசந்தி பூஜைகளில் ஆகமங்கள் குறிப்பிட்டவாறு அந்தந்த சந்திகளில் அவற்றுக்குண்டான நிருத்த உபசாரமும் இடம்பெற்றது
7 / 10
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 1993- 1997ல் பொறியியல் பட்டப் படிப்பைப் படித்த முடித்து தற்போது வட அமெரிக்காவில் வாழும் முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் சந்தித்து மகிழ்ந்தனர்
8 / 10
அமீரகத்தில் கர்நாடக இசையை பயிற்றுவிக்கும் மோஹனா குழுவினரின் துபாயில் நடத்திய குருவந்தனம் நிகழ்ச்சியில் தமிழக இசைக் கலைஞர்கள் சவுமியா, வயலின் வித்வான் எம்பார் கண்ணன், மிருதங்க வித்வான் நெய்வேலி நாராயணன் இசையில் 308 மாணவ மாணவியர் பாரதியாரின் 17 பாடல்களை பாடினர்
9 / 10
இந்தியகலாச்சாரமையம் கத்தார், இந்தியதூதரகத்தின்கீழ், நடத்திய 'பாரத்உத்சவ் 2023' என்ற மெகா-கலாச்சார நிகழ்வில் இடம் பெற்ற பாரம்பரிய, நாட்டுப்புற மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது
10 / 10
துபாய் எம்ரால்ட் அரிமா சங்கம் 50 மாற்றுத் திறன் பிள்ளைகளை மேடையேற்றி யோகா, நடனம், கருவி இசைத்தல், பாடல், ஒய்யார நடை, ஓவியம் என பன்முகத் திறனை வெளிகொணரும் வகையில், ‘உடான்- மன உறுதி சிறகுகள்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது
Advertisement