தமிழகத்தின் கண்ணாடி

23 Jan 2019
12 mins ago
1 / 39
தேர்தல் வருவதற்கு முன் சுவர் விளம்பர பிரசாரத்தை பாஜ துவக்கியது.இடம்: சிவகங்கை.
1 hr ago
2 / 39
பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினர்
1 hr ago
3 / 39
பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்திடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை ஒப்படைத்த வியாபாரிகள் .
1 hr ago
4 / 39
சென்னையில் நடந்துவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க நாளில் விருந்தினர்களை கவரும் வகையில் வந்த டிஜிட்டல் குதிரை.
1 hr ago
5 / 39
ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சிவகங்கை அருகே பழமலை நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளி பூட்டியிருந்தது. இதனால் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடினர்.
1 hr ago
6 / 39
தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு பெண் சிசு கொலையை தடுக்க வலியுறுத்தியும் கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே மவுன பேரணியில் பெண் குழந்தையை தலையில் தூக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வெளிநாட்டவர்.
1 hr ago
7 / 39
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
1 hr ago
8 / 39
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது இதில் இடம் பெற்ற கண்காட்சியை பார்வையிட வந்தவர்களுக்கு பேட்டரிகார் வசதி செய்யப்பட்டிருந்தன.
1 hr ago
9 / 39
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஜாக்டோ ஜியோவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 hr ago
10 / 39
திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோடு குடியிருப்பு பகுதியில் பல நாட்களாக குடிநீர் வராததால் மாநகராட்சி லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்கின்றனர்.
1 hr ago
11 / 39
தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு பெண் சிசு கொலையை தடுக்க வலியுறுத்தியும் கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே பேரணி நடந்தது.
1 hr ago
12 / 39
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இடம்: சிவகங்கை.
1 hr ago
13 / 39
கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ சிலையை ராமகிருஷ்ணா மிஷன் நிர்மலேஷனந்தா மகாராஜ் திறந்து வைத்தார்
1 hr ago
14 / 39
சிவகங்கை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 hr ago
15 / 39
நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
1 hr ago
16 / 39
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது. இதில் இடம் பெற்ற கண்காட்சியில் மரத்தால் ஆன பிரேம் உடன் கண்ணாடி மற்றும் கடிகாரம் . இடம் : சென்னை வர்த்தகமையம் .
1 hr ago
17 / 39
கோடை வருவதற்கு முன்பு கோவை, சோமனூர் பகுதியில் குடங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
1 hr ago
18 / 39
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது. இதில் இடம் பெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல வண்ணங்களின் மிதியடி. இடம் : சென்னை வர்த்தகமையம் .
1 hr ago
19 / 39
கோவை வ.உ.சி., உயிரியல் பூங்காவில் ஈமு கோழி முட்டைகளை ருசி பார்க்கும் காகங்கள்.
3 hrs ago
20 / 39
சென்னை, கொருக்குப்பேட்டை  ரயில்வே லெவல் கிராசிங் இடையே சுரங்கப்பாதை இல்லாமல் தினம் தினம்  அவதிப்படும் பொதுமக்கள்.
3 hrs ago
21 / 39
திருச்சியில் முன்னாள் எம்எல்ஏ பரணி குமார் மகன் கீர்த்தி, ராஷ்மி ஆகியோர் திருமணத்தை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தி பேசினார்.
3 hrs ago
22 / 39
ஜாக்டோ- ஜியோ சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் செய்தனர். இடம்: தாம்பரம் .
3 hrs ago
23 / 39
போக்குவரத்து வட்டார அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இடம்: கிஷ்கிந்தாரோடு, தாம்பரம் மேற்கு.
3 hrs ago
24 / 39
சென்னையில் நடந்துவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க நாளான இன்று பார்வையாளர்களை மகிழ்விக்க நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி.
4 hrs ago
25 / 39
சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க நாளான இன்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தமிழக அரசின் வானூர்தி கொள்கை பற்றிய புத்தகத்தை முதல்வர் பழனிசாமி பெற்றுக்கொண்டார்.அருகில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் முதலீட்டாளர்கள்.
4 hrs ago
26 / 39
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களின் ஒத்திகை நடந்தது.
4 hrs ago
27 / 39
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடந்தது.
4 hrs ago
28 / 39
கோவை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில், தென் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் கால்பந்து போட்டியில் விவேகானந்தா கல்லூரி அணியும், மலப்புரம் எம்.ஏ.ஓ., அணியும் மோதின. இதில் மலப்புரம் அணி வெற்றி பெற்றது.
4 hrs ago
29 / 39
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே மறியல் செய்தனர்.
5 hrs ago
30 / 39
குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையை, புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.
5 hrs ago
31 / 39
பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் குழந்தைகளை ஆபத்தான முறையில் இப்படி அழைத்து செல்கின்றனர். இடம் :ஒட்டன்சத்திரம் அருகே .
10 hrs ago
32 / 39
இயற்கைக்கு ஈடு இணையேது... : காலநிலை மாறி பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், காலையில் எட்டிப்பார்க்கும் சூரியனின் பின்புலம், கண்களுக்கு விருந்தளிக்கிறது. இடம்: உடுமலை ரோடு.
12 hrs ago
33 / 39
ஊனமுற்ற தன் தந்தையின் வாகனத்தில் மழலை பேச்சில் தனக்கு தானே ஊக்கப்படுத்தும் பெண் குழந்தை. இடம் : கோவை கலெக்டர் அலுவலகம்
15 hrs ago
34 / 39
வீரர்களை பந்தாடிய காளை : திண்டுக்கல் அருகே உலகம்பட்டி ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாடிய காளை.
15 hrs ago
35 / 39
கும்மியாட்டம்: திருப்பூர் மலைக்கோவில் தைப்பூச தேர்திருவிழாவை ஒட்டி, கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
15 hrs ago
36 / 39
கருத்துக் கேட்பு கூட்டம் : புதுச்சேரி மின்துறை கருத்துக்கேட்பு கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
15 hrs ago
37 / 39
முற்றுகை போராட்டம் : பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 hrs ago
38 / 39
விழிப்புணர்வு நோட்டீஸ்: கோவை பொள்ளாச்சி இடையே பயணிகள் ரயில் இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச் சங்கம், ஆர்.பி.எப்., இணைந்து கோவை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு யூ.டி.எஸ்., செயலி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
15 hrs ago
39 / 39
மினிமாரத்தான் ஓட்டம்: திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் வாரவிழா முன்னிட்டு பெண் குழந்தைகளைக் காப்போம் என்று மினி மாரத்தான் ஒட்டம் நடந்தது.